Pages

22 வருடங்களாக கொழும்பில் அடிப்படை வசதி இன்றி வாழும் மட்டக்குழி அகதி முகாம் மக்கள்

மழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் நிரம்பி வழிகின்ற மலசலகூடம், கதவுகளின்றிய கழிப்பறைகளையும் திறந்த வெளியில் குளியறை என 22 வருடங்களாக இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். காக்கைதீவு முஹஜறீன் முகாம் மக்கள். ஓடித்திரியும் சிறுவர் பட்டாளம் உக்கிய தகரங்களால் வேயப்பட்ட கூரைககள், நான்கு அடி உயரமுள்ள சின்ன சின்ன குடீசை வீடுகள், வீPட்டு வாசலோடு தொடரும் பக்கத்து வீடு... என்று கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த இடம் தான் இந்த முகாம். கொழும்பு நகரிலிருந்து சற்று உட்புறமாக அமைந்ததே காக்கைதீவு எனும் கடலை அண்டிய பகுதியில் தான் அமைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் அகதிகளாக இங்கு குடியேறினர். இந்த அகதிமுகாம் நிலப்பரப்பு ஒரு சதுப்பு நிலமாகும். பாம்புகளும் பற்றைகளுமாய் காணப்பட்ட பிரதேசம் பாடசாலை கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு நிலத்தின் தன்மை சதுப்பு நிலமாகிய காரணத்தினர் பாடசாலை கட்டும் முயற்சி கைவிடப்பட்டு புறம்போக்கு நிலமானது.

அந்நிலத்திலேயே இம்மக்கள் தமக்கான தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர் ஆனால் அதுவே அவர்களிற்கு நிரந்த வீடாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஓலைக்குடிசைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளை அரச சார்பற்ற நிறுவனங்களில் உதவிகளுடன் தகரங்களால் அமைத்தனர். ஆரம்பத்தில் 200 குடும்பங்கள் வசித்த போதும் தற்போது 90 குடும்பங்கள் வாழ்கின்றனர். சிறிய நிலம்பரப்பில் கூட்டுக்குடும்பமாக வாழும் இவர்களின் ஒற்றுமை பாராட்டப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் கால் நீட்டித்தூங்க முடியாது விறகுக்கட்டைகள் அடுக்கி வைப்பது போல் இரவுப்பொருதைக்கழிக்கும் இவர்களின் நிலை வேதனைக்குரியதே.


வீடுகள் மிக நெருக்கமாகவும் சிறிதாகவும் காணப்படுவதால் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. மழைகாலம் தான் இவர்களுக்கு முக்கிய எதிரி.. நிரம்பி வழியும் மலசல கூடம், எந்நேரமும் ஊறிக்கொண்டிருக்கும் நிலம். வரும் நீரை தடுக்க முடியாது கீழே தள்ளும் உக்கிய தகரங்கள், மூக்கின் மேல தானாக உயரும் கைகள் என மழைகாலத்தின் காட்சிகளாக அமைகின்றன.. 90 குடும்பங்கள் 8 கழிப்பறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் மோசமானது.  ஆண்களுக்கு 4 கழிப்பறைகளும் பெண்களுக்கு 4 கழிப்பறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரம் என்றால் கூட காத்திருந்து கடமை முடிக்கும் துர்ப்பாக்கிய நிலை. கழிப்பறைகளுக்கு கதவுகள் இல்லை முறையாக சுத்தம் செய்யப்படுவதும் இல்லை. கதவுகள் இன்றிய கழிப்பறைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவில் பெண்பிள்ளைகள் தனியாக கழிப்பறைக்குள் செல்லமுடியாதுள்ளது.  அதற்கு ஆண்பிள்ளைகளின் நடவடிக்கையே காரணம்.

வெட்டவெளியில் அமைந்த ஒரே ஒரு குளியலறை. நேர சூசிப்படி குளிக்கும் நடைமுறை. குhலை 6 மணிமுதல் 11 மணிவரை ஆண்களும் 11 மணிமுதல் இரவு 8.00 மணி வரை பெண்களும் குளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர தேவையாக இருந்தாலும் முறை மாறி குளிக்க முடியாது.

தாய் பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று ஒரு சிறிய குடிசைக்குள் கூட்டுக்குடும்பமாக வாழ்வதாலும் நெருக்கமாக குடிசைகள் அமைந்திருப்பதாலும் மறைவான குளியறைகளோ கழிப்பறைகளோ இல்லாததால் சமுக சீர்கெடு மலிந்து காணப்படுகின்றது. 
http://www.facebook.com/pages/Abis-photography/543407969021076?ref=ts&fref=tshttp://www.facebook.com/photo.php?fbid=551732508188622&set=a.543878522307354.140482.543407969021076&type=1&theater
சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் ஆண்கள் சம்பாதிக்க தொடங்கி விட்ட மன தைரியத்தில் மனம் போன போக்கில் வாழப்பழகி விட்டனர்.  போதைவஸ்து குடி பழக்கம் என்று தம்மை அடிமையாக்கி விட்டனர்.

பெண் அடிமைத்தனத்திலிருந்து எமது நாடு எபபோதோ மீண்டு வந்த போதும் இங்கு பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காத மதிக்கவில்லை.. பெண்பிள்ளைகள் வெளியில் சென்று படிப்பதையோ தொழில் செய்தாலோ இச் சமுகம் வேறு கோணத்தில் திரிபுபடுத்திப்பேசுகின்றது. பேண்களுக்கு கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் அவர்கள் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் உலகம் அந்த முகாம் தான். சிறுவயதிலேயே திருமணம் செய்து குடுப்ப பொறுப்பை ஏற்கின்றனர்.  

இது குறித்து முகாம் உள்ள ஊஃ010 கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகர் ஆ.லு.ஆ. சிதிக் இது பற்றி கூறுகையில் 'இம் முகாம் பிரச்சனைகள், வாழ்வு நிலை பற்றி எவ்வித தகவலும் முறைப்பாடுகளும் வரவில்லை. இந்நிலையில் நான் என்ன செய்ய முடியும்? இப்பகுதி மக்களிற்கு சமூகத் தொடர்பாடல் போதாது வெளியுலகம் தெரியாது. புடிப்பறிவு குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் நான் ஒரு வகையிலும் உதவ முடியாது அவர்கள் என்னிடம் வரட்டும் வந்து முறையிடட்டும் பின்னர் பார்க்கலாம்' என பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.

ஆரோக்கியமான மனித வாழ்விற்கு சுகாதாரம் முக்கியமானம் ஆரோக்கியமான நாட்டிற்கு அடையாளம் மக்களின் சுகாதாரம் தான். அப்படி இருக்கும் Nபுhது எம் மக்கள் இவ்வாறான அருவருப்பான சூழலில் 22 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிந்து இத்தனை வருடங்களிற்கு பின்னும் கொழும்பு மாநகரத்தில் இப்படியான ஒரு அகதி முகாம் இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது. தற்போது முஸ்லிம் கலாசார சபையின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. இவர்களால்  ஏதும் நன்மை கிடைக்குமா? என முகாம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

'இப்பகுதிக்கு வரும் அரசியல் வாதிகள் எம்மை விளம்பரப்படுத்தி வெளி நாடுகளிடம் இருந்து பணவுதவி பெறுகின்றனர். இருப்பினும் அவை எம்;மை வந்தடைவதில்லை' என்பது இம்முகாம் மக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் நமக்கான அடிப்படை வசதிகளை ஏற்பத்தித் தருவார்கள் என்று 22 வருடங்களாக காத்திருக்கின்றனர். முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொள்ளும்  அரசியல் வாதிகள் இம் மக்களின் வாழ்வினையும் ஒரு தரம் கண்திறந்து பார்க்கவேண்டும். ஆவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

முஸ்லீம் சமூக ஆர்வலர்கள், புலம்பெயர்வாழ் முஸ்லீம் அமைப்புகள் இம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்பதற்கான வழிமுறைகளை செய்வேண்டிய பொறுப்பு உங்களுடையது. கலாச்சார சீர்கேடுகள் ஏற்பட அடிப்படை பிரச்சினை காரணமாக இருப்பதை கண்டுகொள்ளுங்கள். துpனம் தினம் தம் பிரச்சினை தீர்க்க யாராவது வருவார்கள் என்று 22 வருடங்களாக வாசல் நோக்கியுள்ள கண்களுக்கு யார் பதில் சொல்வார்கள்.. எப்போது அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் கபடி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்..

கிராமப்புறங்களின் பாரம்பரிய கிராமிய  விளையாட்டாக இருந்த கபடி இன்று தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் விளையாடப்படும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த கபடி விளையாட்டு யாழ்ப்பாணத்து ஊர்களில் இளைஞர்களின் பொழுது போக்கு விளையாட்டாக இருந்தது. தற்போது கழகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் மாவட்ட மாகாண மட்டங்களை நோக்கி நகர்வடைந்து வருகின்றது.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்த கபடி கிராம மட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் கபடி ஆரம்பத்தை கணிப்பிட முடியாதுள்ளது.

ஆரம்ப காலங்களில் மாலை நேரங்களில் தோட்ட வெளிகளில் அரங்கேறும். இளவட்டத்தினர் ஒன்றுகூடி இரு கன்னையாக பிரித்து விளையாடுவார்கள். ஒரே ஊர் சொந்த பந்தம் என்பதால் போட்டி அடிபாடுகள் கிடையாது. தோட்ட வெளியில் நடக்கும் கபடியை பார்க்க ஊரே ஒன்று கூடும். இன்று கபடி என்றால் சண்டை ரவுடிகளின் விளையாட்டு, அபாயமானது என்ற ஒரு தவறான எண்ணம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. 

பின்னர் கழகங்களின் வளர்ச்சி போட்டிமுறையை ஏற்படுத்தியது. இன்று பிரதேச மட்டத்தில் உள்ள கழகங்கள் தம் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி கபடியை ஆடுகின்றனர்.

நெடுந்தீவு, ஊர்காவற்துறை, பருத்தித்துறை, தெல்லிப்பழை, வேலனை, கரவெட்டி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் கபடி பிரபல்யம் பெற்றுள்ளது. வலைப்பந்து கிரிக்கெற் என்று மெதுவாக நகர்ந்த பெண்கள் இன்று கபடியிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். தெல்லிப்பழை பருத்தித்துறை, நெடுந்தீவு, உடுவில் போன்ற பிரதேசங்களில் பெண்கள் கபடி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கபடி விளையாட்டில் பங்கு பற்ற முடியும். ஏழு பேர் கொண்ட அணி களத்தில் இறங்கும் எதிரணியை வெற்றிகொள்வதற்காக பலத்துடன் மோதுவார்கள்.

யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்கள் பிரிவில் சென் தோமஸ் விளையாட்டுக்கழக அணியும் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை இளஞ்சுடர் விளையாட்டு கழக அணியும் முன்னிலை வகிக்கின்றது.

யாழ் மாவட்ட அணியினர் மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றுகின்ற போதும் அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது.
மணற்தரைகளில் விளையாடிப்பழகிய வீரர்களுக்கு காப்பெற் தரையில் விளையாடுவது சவால் நிறைந்த ஒன்று. யாழ்ப்பாணத்தில் காப்பெற்  ஆடுகளம்  இல்லை. போட்டிகளின் போது வெளிமாவட்டங்களில் காப்பெற் தரையில் விளையாட முடியாது தடுமாறுகின்றனர்.

தற்போது கபடி விளையாடும் வீரர்கள் முழு நேரப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை.. தமது வேலைகளை முடித்து விட்டு பொழுது போக்கு விளையாட்டாகவே கபடியை பார்க்கின்றனர். மருதங்கேணி பிரதேசத்தில் திருமணமானவர்களும் கபடி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்கள் தமது பலத்தினை பயன்படுத்தி உள்ளுர் போட்டிகளில் வெற்றிபெறுகின்ற போதும் வெளிமாவட்டங்களில் பலத்தை விட மூலையையே அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மாகாணப்போட்டிகள் சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது.

தற்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் கபடி பயிற்சிகள் வழங்கப்படுகின்றனர். பதினைந்து வயதினருக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை ஆரோக்கியமான விடயமும் வரவேற்கப்பட வேண்டியது. என யாழ் மாவட்ட கபடி பயிற்றுனர் முகுந்தன் தெரிவித்தார்.

தற்போது ஏனைய விளையாட்டுக்களை போல கபடியும் வளர்ச்சி கண்டு வருகின்றது. வடமராட்சி இளவாளை நெல்லியடி சாவகசசேரி போன்ற பிரதேச பாரசாலைகளில் கபடி விளையாடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கபடி விளையாட்டு வளர்ச்சி கண்டுள்ள போதும் அதனை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது.  காப்பெற் தரை ஆடுகளத்தல்p வெறும் காலுடன் விளையாட முடியாது. கபடி போட்டியாளர்கள் பயன்படுத்தும் காலணிகள் விலையுயர்ந்தவை. ஒரு வீரருக்கான காலணிக்கு குறைந்தது 3500 ரூபா தேவைப்படுகின்றது. நிதிப் பற்றாக்குறையால் கபடி விளையாட்டினை வளர்த்தெடுக்க முடியாத சூழ் நிலை காணப்படுகின்றது. யாழ்மாவட்டத்தி;ல் கபடிக்கான போட்டி குறைவக காணப்படுகின்றது. இதனால் வீரர்கள் தம் திறைமையை வெளிப்படுத்தவும் பலப்பரீட்சையில் ஈடுபடவும் முடியாமல் இருக்கின்றது. போக்குவரத்துப் பிரச்சினை நிதிப் பற்றாக்குறை போன்றவற்றால் கபடியை வளர்தெடுப்பதில் சவால்களை எதிர்நோக்குகின்றனர். இத் தேவைகளை நிவர்த்தி செய்யுமிடத்து யாழ் மாவட்டத்தின்  கபடியும் வளர்ச்சியடையும்

சாட்சி சொல்லும் உயிரற்ற உடல்கள்

 பினங்கூட எழுந்து வந்து சாட்சி சொல்லும் என்பார்கள். சாட்சிகளே இல்லாமல் தட்;டி கேட்க யாரும் இல்லை என்று துணிவுடன் அரங்கேறும் நிகழ்வுகளை வெளிக்கொணர யாரும் இல்லா விட்டாலும் சாவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு காட்டவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு இன்றைய அபிவிருத்தி உலகமும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. சர்வாதிகார ஆட்சியின் கீழ் தம் மக்களை தாமே அழித்து ரத்தத்தில் குளித்து சந்தோஷம் அடைகின்ற ஆட்சியாளர்களும், அவர்கள் படைகளும் செய்கின்ற கொரூரமான நிகழ்வுகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உலகிற்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. கும்பல் கும்பலாக கொன்று குவிக்கப்பட்டிருக்கும் அப்பாவி உயிர்களுக்கு நடந்த அநீதியை உலக நாடுகள் பாருங்கள் என்று சிரிய மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கி;ன்றனர்.

சிரியாவில் அரசியல் வன்முறைகளில் காத்திரமான செல்வாக்கை செலுத்தி வரும் சமூக ஊடகங்கள் அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெடுப்பதில் பெரும் பங்களிப்பு செய்கின்றன. சிரியாவில் வெடிக்கும் ஏவுனைகளின் சத்தத்தையும், ஓடுகின்ற ரத்த ஆற்றினையும் உலக மக்கள் உணர கூடியதாக இருக்கின்றது என்றால் அது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் துணிகரம் மி;க்க உவைணைநn தழரயெசடளைவள களின் செயற்பாடுகளுமே.

சாட்சியம் அற்ற யுத்தத்தை நடத்தலாம் என்று நினைக்கும் பசார் அல் அசாத்  அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் இந்த நிழல் யுத்தத்தில் உயிர் அற்றவர்கள் சாட்சியாய் நிற்கின்றமை உலக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

;ஆட்சியாளர்கள் செய்த அட்டூளியங்கள் சாட்சிகள் இன்றியும் சாட்சிகள் அழிக்கப்பட்டும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டும் கொடுங்கோல் ஆட்சிகள் அரங்கேறின. ஆபத்தான் யுத்த களத்திற்கு ஊடகவியலாளர்களும் மனிதாபிமான குழுக்களும் செல்ல முடியாத சாத்தியம் அற்ற இடத்தில்; ரத்தக்கறை படிந்த கொடுங்கோலின் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட சமூக வலைத்தளங்கள் செயற்படுகின்றன. ளுNN ஜளாயஅ  நெறள நெவறழசமஸ வெளியிட்டுள்ள மனிதப்படுகொலையின்  புகைப்படங்களில் மனித உடல்கள் மட்டுமன்றி ஷெல் வீச்சுக்களும் பதிவாகியுள்ளன.

வன்னி இறுதியுத்தத்தி;ல் படையினரால் செய்யப்பட்ட மனிதப்படுகொலைகளும் சித்திரவதைகளும் சாட்சிகள் இன்றியும் சாட்சிகள் மறைக்கப்பட்டு; இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் ஒரு சில எச்சங்களாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட கானொளிகள் அநீதிகளையும் படையினரின் வெறித்தனத்தையும் உலகிற்கு எடுத்து காட்டியது. சாட்சிகளால் மனித உயிர்கள் இன்று நிற்க முடியாத நிலையில் உயிர் அற்ற உடல்களே உயிருடன் இருக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.

மரணமும் மரணத்தால் அலைக்கழிக்கப்பட்ட நாட்களும் மிக்க கொடுமையானது. நம் மீது குண்டு விழாதா என்று மனித படுகொலைகளை கண் முன் பார்த்த ஆன்மாக்கள் ஏங்கித் தவிக்கின்றன. கண்முன்னே சிதறிப்போகும் உயிரற்ற உடல்கள், உயிர் போகாதா என்று ஏங்கியபடி இருக்கும் நடைபினங்கள் என்று விரக்தியின் விளிம்பில் வாழும் மக்களை ஆற்றுவதற்கு விரும்பும் சர்வதேசம். அடிமேல் விழும் அடியை தடுப்பதற்கோ அணை போடவோ யாரும் இல்லை. ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள்.  நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் பாருங்கள் என்று கொடுங்கோல் ஆட்சியாளர்களும் நாங்கள் பார்க்கின்றோம் நீங்கள் அரங்கேற்றுங்கள் என்று சர்வதேசமும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது. அழுது அழுது வற்றிப்போன கண்ணீருடன் இழப்பதற்கு எதுவும் இல்லை சாட்சியங்களை மட்டும் காண்பிக்கின்றோம் என்று விரக்தியின் விழிம்பில் இருந்து மக்களும் தினம் தினம் போராடி வருகின்றனர்.

எவை நடந்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நம்மவர் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான்.  துக்கத்தின் நினைவுகள் மிகக் கொடியவை மீள மீள வரும் அழியாத நினைவுகள். மீண்டும் இப்படி ஒரு யுத்தத்தையும் மனித படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுக்காப்பின்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று வாழும் நம்மவர் மக்கள் சிரிய மக்களுக்காய் வருத்தத்தை மட்டும் தான் சொல்ல முடியும். காயம் மாறுகின்ற போதும் வடுக்கள் மாறுவதில்லை இந்த சிரிய மக்களின் அவலமும் மனிதப்படுகொலைகளும் எம்மவர் நினைவுகளை மீண்டும் நினைவு படுத்துகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலையின் சாட்சியாய் எஞ்சி  இருப்பது சனல் 4 வெளியி;ட்ட கானொளி மட்டுமே. அப்படி ஒரு சாட்சியாய் சிரிய மனிதப் படுகொலை அடங்கிய கானொளிகளும் புகைப்படங்களும் முக்கிய ஆதாரமாக பசார் அல் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சி சொல்லும்                    

மரணத்தை தேடிச்செல்லும் உயிர்கள்

 பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள்.. விரட்டிய துப்பாக்கிகளுக்குள் இருந்து தப்பி குண்டு மழையின் சாரலில் நனைந்து முகாம் வாழ்வில் குளிர்காய்ந்து நொந்து வந்துள்ள மக்களுக்கு அதிகரித்து வரும் விபத்துக்களும், மரணங்களும் வாகன ஓட்டுனர்களுக்கு பயத்தினை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ அவர்களின் உறவுகளுக்கு பயத்தினை காட்டி விட்டது. காலையில் செல்பவர்கள் மீண்டும் திரும்பி வீடு வந்து சேரும் வரை மரண பயம் தான். யாழ்ப்பாணத்தில் தினம் தினம் நடைபெறுகின்ற விபத்துக்களும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களுமே அதற்கு காரணம். காப்பெற் வீதிகளின் ; விரைவான ஓட்டம் விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகின்ற போதும் மக்கள் வீதி ஒழுங்கை பின்பற்றாமையும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது. வீதிக்குறியீடுகள் போடப்பட்டிருக்கின்ற போதும் அதனை மக்கள் அவதானிப்பதில்லை. விரைவான ஓட்டத்தால் மரணங்களும் போட்டி போட்டுக்கொண்டு அரங்கேறுகின்றன.
 
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் பெரு வாகனங்களின் பாவனைகள் கடந்த காலத்தை விட தற்போது கணிசமான அளவு அதிகரித்து காணப்படுகின்றன. யாழ் மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டு 51151 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2010 ஆண்டு 83329 வாகனங்களும் 2011 ஆண்டு 77859  வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012 ஏப்ரல் மாதம் வரை 81156 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு போக்குவரத்துத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. கால் நடையாக நடந்து சென்ற மனிதன் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் அதிவேக வாகனங்களை கண்டுபிடித்தான். கட்டுக்கடங்காத வாகனங்கள் மனித உயிர்களை பறிக்கின்றன. யாழ்ப்பாண வீதிகளின் தரம் அதிகரிக்கப்பட்டு வருகின்ற அதே வேளை விபத்துக்களும் மரணங்களும் போட்டி போட்டு நடைபெறுகின்றது. யாழ்ப்பாண வீதிகளில் பொலிஸாரும் பாடசாலை மாணவர்களும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் சரி வாகனசாரதிகளும்; சரி வீதி ஒழுங்கு முறைகளை ஒழுங்காக  கவனிப்பதில்லை. மக்களின் கவனம் இன்மையினால் தங்களுக்காக மரணத்தை தாங்களே தேடிச்செல்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.
 
சாரதி பயிற்சி நிலையத்தில் முறைப்படி கற்று சாரதி அனுமதி பத்திரம் பெற்று பயணிக்கும் சாரதிகள் வீதி ஒழுங்கை கவணிக்காமையும் அதனை பின்பற்றாமையும் மரணத்திற்கு முக்கிய காரணமாகும்;. ஒவ்வொருவருடைய விதியும் அவர்களாலேயே தீர்மாணிக்கப்படுகின்றது. மதுபாவனையும், போதையில் சாரதிகள் வண்டி ஓட்டிச்செல்கின்றமையும் தங்கள் விதியை மட்டுமன்றி எதிரே வருபவரின் விதியையும் சேர்த்தே மாற்றியமைக்கின்றனர்.
;
.குன்றும் குழியுமாக காணப்படும்; வீதிகள் தற்போது மெதுவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இது எம் இளைய சமுதாயத்திற்கு தெரியாதா? அதிவேகப் பயணம் குன்றும் குழியுமான வீதிகளில் மரணக்குழிகளை அமைத்து விடுகின்றன. புதிய புதிய மோட்டார் சைக்கிள்களின் வருகை வீதிகளை அலங்கரிக்கின்றன. இந்த மோட்டார் சைக்கிள்கள் தற்போதைய காப்பெற் வீதிகளில் சறுக்கு தன்மையை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. புதிய ரக மோட்டார் சைக்கிள்களும் எம் இளைய சமுதாயமும் அதிவேகப்பயமும் ஆபத்து நிறைந்தவை.
 
போரில் சிந்திய குருதி ஒரு புறம், விபத்தில் சிந்தும் குருதி மறுபுறம் இப்படியே இரத்தம் சிந்தும் முறமை பழைமையாகிப் பேர்ய்விட்டதோ நம் சமுதாயத்திற்கு. பட்டகாலிலே படும் என்று சொல்வார்கள் மரணத்தையும் மரணபயத்தையும் கடந்து வந்து நிர்க்கதியாய் நிற்கும் நம்மவர்க்கு இந்த விபத்துக்கள் மீண்டும் மரணத்தையும் மரண பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ் மக்களை பொறுத்தவரை தற்போது வீட்டிற்கு ஒரு வாகனம் இல்லை எனில் கௌரவக் குறைச்சல் என்ற நிலை தோன்றியுள்ளது. தனி மனித வாகனங்கள் நகர் பகுதியில் நெரிசலை ஏற்படுத்தும் அதே வேளை விபத்துக்களுக்கும் காரணமாக அமைகின்றது. கால்நடையாக நடந்து திரிந்த மனிதன் வாகனங்களை நம்பி வாழ்கின்றமை துவிச்சக்கர வண்டி பாவனையை கேள்விக் குறியாக்கியுள்ளது.
 
வேலைகளையும் நேரத்தையும் வாகனங்கள் இலகுபடுத்தி வருகின்றது. காலையில் வாகனம் எடுத்துச்செல்லும் உறவுகள் மீண்டும் வீடு திரும்பும் வரை அந்த குடும்பம் ஏக்கத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலை. விபத்து என்ற செய்தி வந்ததும் தம் பிள்ளையா? தன் கணவனா? என்று ஒவ்வொரு உறவும் தினம் தினம் பதறுகின்ற நிலை உருவாகியுள்ளது.
 
அவசர வேலையாக இருப்பின் நிதானமின்றி செல்லும் சாரதிகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. விபத்துக்களை கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதிலும் தினம் தினம் விபத்துக்ள் அதிகரித்த வண்ணமே உள்ளன. விபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு பயணியின் ஒத்துழைப்பும் அவசியம்.  மக்களுக்கும் வீதி ஒழுங்கு பற்றிய போதிய அறிவின்மையும் யாழில் ஏற்படும் வீதி விபத்துக்கு காரணமாகும். வீதிக்குறியீட்டு சமிஞ்சை விளக்குகள், கடமையில் ஈடுபடும் பொலிஸார் இன்மை என்று விபத்துக்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்ற போதும் தமக்கான விதியை மக்களே ஏற்படுத்துகின்றனர்.

மீள்குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாகும் கண்ணிவெடிகள்..


யாரோ யாருக்கோ வைச்ச நிலக்கண்ணி வெடிகள் யாரோ மீள்குடியேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது. போரில் தம் எதிரிப்படையின் பலத்தை இழக்க செய்ததில் இந்த நில  கண்ணி வெடிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் பெரும் பங்களிப்பு செய்தன. யுத்தம் நம் நாட்டில் நடந்தது என்பதற்கு சான்றாக கால்களை இழந்தும் அவயங்களை இழந்தும் வாழும் மக்கள் சாட்சிகளாக உள்ளனர். யுத்தம் ஓய்ந்து விட்டது சமாதானம் வந்து விட்டது மக்கள் தம் இயல்பு வாழ்விற்கு திரும்பி விட்டனர் என்று வெளியுலகத்திற்கு காட்டுகின்றவர்கள்  நிலத்தில் மறைந்திருந்து தினம் தினம் அச்சுறுத்தும் கண்ணிவெடிகளுக்கு இன்னமும் முடிவு காணவில்லை.
வட கிழக்கில்  யுத்தம் ஓய்ந்து விட்டது. மீண்டும் தம் சொந்த மண்ணில் சென்று வாழவேண்டும் என்று அகதி முகாம்களிலும் உறவுகளின் வீடுகளிலும் ஏக்கத்துடன் வாழும்  மக்கள் எப்போது மீள்குடியேற்றம் என்று எதிரபார்த்துக்காத்திருக்கின்றனர்.
நினைத்தவுடன் தம் நிலக்களுக்கு செல்லமுடியாத ஜனநாயக நாட்டில் மீள்குடியேற்றம் மட்டும் உடனடி சாத்தியமா? கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாமல் அபாயப்பிரதேசம் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மக்கள் செல்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளின் தீவிர செயற்பாடுகள் வட கிழக்கில் காணப்படுகின்ற போதும் அதிகமாக சிறுவர்களும் பெண்களும் அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது இயலாத ஒன்றாக காணப்படுகின்றது. கண்ணிவெடிகள் பற்றிய கல்வி, அறிவூட்டல், விழிப்புணர்வுகள் எச்சரிக்கை மையங்கள், துண்டுப்பிரசுரங்கள், எல்லைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்று எவ்வளவு தான் செய்தாலும் தம் மக்கள் அதன் தாக்கத்திற்கு உட்;பட்டே வருகின்றனர்.
மிதி வெடிகளில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஜ.நா விசேட அறிக்கை தெரிவி;க்கின்றது. அதே நேரம் இக் கண்ணிவெடி ஒன்றின் கொள்வனவு 1200 ரூபாவாக காணப்படுகின்றது. இக் கண்ணிவெடியினை அகற்றுவதற்கு சுமார் 115000 ரூபாவரை செலவு செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  கண்ணிவெடிகள் பற்றிய கல்வி விழிப்புணர்வு நாடகங்கள், இன்று பாடசாலையூடாக மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. மாணவர்களின் விளையாட்டு தனம் அவர்கள் வாழ்வில் வினையாகி விடக்கூடாது என்பதற்காகவே இது பற்றிய விளக்கங்கள் பல வடிவங்கிளில் வழங்கப்பட்டு வருகின்றது. 
இக் கண்ணிவெடிகள் நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் அச்சுறுத்தல் பொருளாக உள்ளது.  அதனால் தான் நிலக்கண்ணி வெடி அற்ற உலகத்தை தோற்றுவிப்பதற்கு உலக மட்டத்தில் ஒன்றுகூடல்களும் அறிக்கைகளும் பல வெளியீடுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்மையில் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற 'கார்டகெனா' மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இதிலிருந்து விடுபடுவதற்கு ஐந்து ஆண்டுகள் கொண்ட திட்டமொன்றின் வரைபிற்கு அங்கீகாரம் வேண்டிநிற்கின்றது. அதாவது மனிதர்களுக்கு எதிரான நிலைக்கண்ணிவெடிகளின் தடுப்பு மீதான உடன்படிக்கையின் பிரகாரம் கண்ணிவெடிக்களை அகற்றுதல், கண்ணிவெடியால் பாத்pக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், மீதமுள்ள சகல கண்ணிவெடிகளையும் தேடி; அவற்றை அழித்தல் என்பனவற்றுக்காகவே இவை முன்வைக்கப்பட்டன.
10 ஆண்டுகள் அமுலாக்க ஒப்பந்தம் முடிவடைந்தும் இன்னமும் நிலக்கண்ணிவெடிகளால் மக்கள் பாதிக்கபட்ட வண்ணமே உள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் வாழ்வின் மீது நம்பிக்கை இழந்துமுள்ள நிலையில் திட்டத்தை அமுல்படுத்துவதிலிருந்து தவறியுள்ளமையை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் மட்டும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 4பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  உலகலாவிய ரீதியில் சுமார் 44 மில்லியன் கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெடிக்காத நிலையிலும் வெடிக்கக்கூடிய நிலையிலும் பல மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் நிலத்தில் புதைக்கப்பட்டள்ளன.
ஒட்டாவா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள பல நாடுகள் இதுவரையில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் தீர்க்கமான முடிவினை எட்டவில்லை என்றே கூறப்படுகின்றது. இது இவ்வாறிருக்க யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் அகதிமுகாம் வாழ்க்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் அழுகுரல்களி;ன் ஓலங்களும் குறைவடைந்து விட்டன. நிலத்திற்கான போராட்டங்களும் அதிகாரத்திற்கான போட்டிகளும் இல்லாது போனாலும் மீண்டும் தம் சொந்த நிலத்திற்காக  தினம் தினம் மனதளவில் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். 20 வருடங்களுக்கு முன்னர் தம் சொந்த நிலங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தம் சொந்த இடங்களை நோக்கி குடியமர்ந்த வண்ணம் உள்ளனர். சோலையாக இருந்த தம் இடங்கள் காடுகளாகி சோலையிழந்து இருக்கும் போது கூட கவலையில்லாத மக்கள் தம் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும் தம் கால்கள் இருக்கின்றவா என்று உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். என்றோ யாருக்கோ வைத்த கண்ணிகள் இன்று தம் கால்களை பழிவாங்கிவிடுமோ என்ற ஏக்கம் இன்னமும் குறையவில்லை. காணிகளை துப்புரவு செய்யும் போதும் குப்பைகளை எரிக்கும் போது கண்ணிகள் பதம்பார்த்து விடாது விலகியே நிற்கின்றனர். ஓடியாடி விளையாடும் தம் குழந்தைகள் விளையாட்டப்பொருளாக கண்ணிகள் ஆகி விடாது கண்ணில் விளக்கென்னை விட்டு விழித்திருக்கின்றனர்.
நிலக்கண்ணிகள் அகற்றி பாதுகாப்பான இடம் என்று அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்களும் நம்பிக்கை இழந்தவர்களாய் நிலக் கண்ணிகளை எண்ணியே வாழ்கின்றனர். நிலக்கண்ணிகள் அகற்றப்பட்ட பிரதேசங்கள் அகறறப்படாத பிரதேசங்கள் என்று அடையாளப்படுதப்பட்டுள்ளமை அகதிகள் தம் நாட்டில் இருக்கின்றனர் என்பதை அடையாளப்படுத்துகின்றது. எஞ்சியிருக்கும் உயிர்களுக்காக  யுத்தத்தின் துன்பங்களை மறந்து  வாழ நினைக்கும் போது மீள்குடியேற்றப்பட்ட  மக்கள் மீள் குடியேற்றப்படாத மக்கள் என பிரிக்கப்பட்டு அவர்களும் மிக விரைவில் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு வந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமைக்கு காரணம் நிலக்கண்ணி வெடிகள் என்று காரணம் காட்டுகின்றது. அகதிமுகாம்களிலும் உறவுகளின் வீடுகளிலும் கஸ்ரப்படும் மக்கள் தம் சொந்த நிலங்களுக்கு செல்லும் நாளை தினம் தினம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
யுத்தபிரதேசங்களில் 1.5 மில்லியன் மிதிவெடிகளும் வெடிக்காத பொருட்களும் 40 சதுர கிலோ மீற்றர் பகுதியில் பரவிக்காணப்படுகின்றன. இந் நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இவற்றை அகற்றுவதற்காக ஆண்களுக்கும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டர்களுக்கும் இது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு நிலக்கண்ணிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வறுமைக்காகவும் வேலையில்லா பிரச்சினைக்காகவும் தம் உயிரையும் பணயம் வைத்து இத் தொழிலை செய்து வருகின்றனர். வெடிக்கக் கூடிய நிலையில் உள்ள கண்ணிகள் தொழில் செய்பவர்களின் கால்களில் கண் வைத்து விடுகின்றனர். உறவுகளை இழந்து ஏதிலியாய் உள பாதிப்புக்குள் இருந்தவர்களுக்கு இந்த கண்ணிகள் வாழ்வின் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையையும் இல்லாது செய்து விடுகின்றது.
துப்பாக்கி வேட்டுக்களையும் சுடு கலன்களையும் ஓடும் இரத்த வெள்ளத்தையும் தலை வேறு கால்வேறாய் கிடந்த தன் உறவுகளின் பினக்குவியலையும் பார்த்து கடந்து வந்து அகதி என்ற பெயருடன் இன்னும் தம் சொந்த இடங்களை ஒரு தடவையேனும் பார்த்து விட்டு சாகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழும் கிழடுகளுக்கு இந்த கண்ணிகள் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.
20 வருடங்களுக்கு முன்னர் தம் சொந்த இடங்களை விட்டு வெளியேறிவர்கள் இன்று யுத்தம் முடிவடைந்து தம் சொந்த மண்ணை பார்க்க வேண்டும். தம் பழைய நினைவுகளையும் கதைகளையும்  தம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் என்று காத்திருக்கும் பாட்டன் முப்பாட்டன் கனவுகளும் ஏக்கங்களும் எப்போது தீர்க்கப்படும். அகதி என்ற சொல் எப்போது தமிழன் பெயரில் இருந்து நீக்கப்படும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls