போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு
போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு சுன்னாகம் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்டு வருகின்றது. போக்குவரத்து விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் முகமாக இந் நடவடிக்கையை மேற்கொள்வதாக சுன்னாகம் பொலிஸ் பரிசோதகர் சிந்தக பண்;டார தெரிவித்தார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாடசாலைகளில் இக் கருத்தரங்கு இடம்பெற்று வருகின்றன. சுன்னாகம் பொலிஸ் பரிசோதகர் சிந்தக பண்டார தலைமையிலான குழுவினர் இக் கருத்தரங்கினை நடாத்தி வருகின்றனர். இக் கருத்தரங்கில் பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றுகின்றனர். இத்தகைய விழிப்புனர்வுக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் இப் பகுதியில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment