Pages

யாழ்ப்பாண சமூகம் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையா?


                     
காலமாற்றமும் விரை வான அபிவிருத்தியும் மனித வாழ்;கையில் மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்துகின்றது . மூடநம்பிக்கை என்ற கட்டுக்களை உடைத்தெறிந்து விஞ்ஞானத்தின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளனர். ஆயினும் கலை கலாச்சாரம் என்ற போர்வைக்குள் இருந்து விரைவாக விடுபட முடியாமல் மன அழுத்தங்களுக்கும் விரக்திக்கும் தவறான வழிநடத்தல்களுக்கும் தள்ளப்படுகின்றனர். பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் பழக்கவழங்கள் பண்பாடுகள் இன்றைய தலைமுறையின் வளர்ச்சிக்கு  முட்டுக்கட்டையாக அமைந்து விடுகின்றது. 

விஞ்ஞானத்தின் வளர்ச்;சியும் விரைவான அபிவிருத்தியும் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. திடீர் என ஏற்பட்ட விரைவான அபிவிருத்தியும் தளர்ந்துள்ள கட்டுப்பாட்டுகளும் சமுதாயத்தில் பிரச்சினைகளையும் மோதல்களையும் தோற்றுவித்துள்ளது. அதிகரிக்கும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கலாச்சார மாற்றங்கள் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தால் ஒதுக்கப்படும் பெண்களும், பெண்களை பெற்றதற்காக தண்டனையை அனுபவிக்கும் குடும்பங்களும்,  பெற்ற தாய் யாரென்று தெரியாமல் பற்றைகளுக்குள் தவழும் யாதும் அறியாத குழந்தைகள் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்புக்களே. 

கலாச்சாரம் மனித வாழ்க்கையோடு ஒன்றினைந்து விடயமாகும் நாகரீகம் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. மாற்றங்கள் மனித வாழ்க்கையில் வரவேற்கப்படவேண்டிய விடயமாகும். 

அன்மைக்காலமாக பற்றைக்குள் வீசப்படும் குழந்தைகள்;, வைத்திய சாலைகளில் விட்டு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பு நடக்காத கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பெண்கள் மீது சுமத்தப்படும் குற்றம், சுதந்திரப் பெண்களுக்கு வைக்கப்பட்டுள்ள பூட்டா? அல்லது பாரம்பரியத்திற்கும்; கலாச்சாரத்திற்கும் வந்த கலங்கமா? 

பெண்மைக்கும், தாய்மைக்கும், ஈடு இணையில்லாத உலகத்தில் இரக்கமற்று பற்றைக்குள் குழந்தையை எறிந்து செல்வதற்கான காரணம் என்ன? தாய்மையும் அன்பும் இல்லாமல் போய்விட்டனவா?. துக்கத்தின் நினைவுகள் பாசத்தையும் தாய்மையும் மறைத்துவிட்டதா? 

பெண்களுக்கு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து  வெளியேறிய பெண்கள் சமுதாயத்தவரால் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

காதலனால் விரிக்கப்படும் வலையில் காதல் என்ற தூண்டிலில் மாட்டி கர்ப்பம் என்ற பரிசினை பெறும் பெண்கள் எதற்காக குழந்தைகளை எறிகின்றனர். திருமணம் ஆன பெண்; பெற்றால் தான் தாயா? அல்லது திருமணமான பெண்ணிற்கு பிறந்தால் தான் பிள்ளையா? காதல் என்ற போர்வை விலகும் போது இமைகள் திறந்து விடியல் தெரியும். அப்போது தனை பெற்ற தாய், வளர்;த்த தந்தை, எதிர்கால கனவுகள் சுமக்கும் சகோதர உறவுகள், தோள் நின்ற சமுதாயம் கண்களுக்கு தெரியும். 

காதலனால் வழங்கப்பட்ட கர்ப்பம் என்ற பரிசினை எப்படி தெரியப்படுத்துவது. தெரிந்தால் சமுதாயத்தின் முன் தலைகுனியும் பெற்றோர், சிதைந்து போன கனவுடன் தெரியும் சகோதர உறவுகள், போகவிட்டு புறம் சொல்லும் கொடுமைகளை நினைத்து மறைக்கப்படுகின்றன உன்மைகள்.

கலாச்சாரம்;, பாரம்பரியம், சமுதாயம், மனித சிந்தனைகளை கட்டுப்படுத்தி தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கியுள்ளது. எம் நெகிழ்வுப்போக்கற்ற சமுதாயம் கட்டுப்பாடுகள் மனித சிந்தனைகளை கட்டுப்படுத்தியுள்ளது. நெகிழ்வுப்போக்கற்ற சமுதாயம் மோதல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகின்றன. 

கலாச்சாரம் பண்பாடு என்ற கட்டுப்பாடுகள் பெண்மையையும் தாய்மையையும் கலங்கப்பட வைத்து விட்டதா? அல்லது கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் கலங்கம் ஏற்பட்டு விட்டதா? மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. காதல் என்ற போர்வைக்குள் ஒரு சில நிமிட  உணர்வுகளால் அரங்கேறும் நாடகம் வாழ் நாளின் மாற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்துகின்றன. காலம் மாறும் போது மாற்றங்களும் ஏற்படும். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. வீட்டிலிருந்த பெண்கள் படிப்படியாக ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி அடைந்தமை கால மாற்றமா? காலத்தின் கட்டாயமா?

பிறந்து சில மணிநேர ஆன குழந்தையை அநாதையாய் விட்டு தாய் சென்றது தாயின் குற்றமா? அல்லது திருமணமாகாதா பெண்ணிற்கு பிறந்தது குழந்தையின் குற்றமா? அல்லது இவர்களை ஏற்காத சமுதாயத்தின் குற்றமா?

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls