யாழ்ப்பாண பிரதேச மக்களின் பண்பாட்டுக் கோலங்களில் ஒன்றாக வீடும் அமைந்து விடுகின்றது. மனித இனத்தின் வரலாற்றில் உணவிற்கு அடுத்தபடியாக உறைவிடம் முக்கிய இடம் பெறுகின்றது. யாழ்ப்பாண சமுதாயத்தவரிடம் வீடும் வளவும் என்ற சொல் முக்கிய இடம் பெறுகின்றது. வீட்டை சுற்றியுள்ள இடத்திற்கு பயன் தரு மரங்களையும் நிழல் மரங்களையும் வளர்த்திருப்பார்கள். ஆடு, மாடு, கோழி முதலின வளர்ப்பதற்கான கொட்டில்களையும் அமைத்திருப்பார்கள்.
gண்டைய வீடுகள் பொருளாதரான நிலைமையை எடு;த்துக்காட்டுவதாக அமைந்தன. வறுமைப்பட்ட அடிநிலை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சிறிய குடிசைகளையும் மண் வீடுகளையும் அமைத்து வாழ்ந்தனர். கொஞ்சம் பொருளாதார வசதி படைத்தவர்கள் விலாசமான மண் வீடுகளை கட்டி வாழ்ந்தனர். அரைச்சுவர் என மண்ணினால் சுவர் அமைத்து பனையோலையாலோ, கிடுகினாலோ வேய்ந்து தரை சுவர் போன்றவற்றை மெழுகி திண்ணை அமைத்திருந்தனர்.
மண் வீட்டில் வாழ்ந்தவர்கள் வசதி பெருக செங்கல், சுண்ணாம்பு கல் சாந்து போன்றவற்றை பயன்படுத்தி வசதியான வீடுகளை அமைத்தனர். சமுதாயத்தில் மேல்வர்க்க மக்களே அதிகளவு வீடுகளை கட்டினர். 19 ஆம் நூற்றாண்டில் வீடு கட்டுவதற்கு தேவையான செங்கற்கள், ஓடுகள், மரங்கள் பிற நாடுகளில் இருந்து பருத்தித்துறை ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை போன்ற துறைமுகங்களினூடு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன. இவற்றால் கட்டப்பட்ட கல்வீடுகள் சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகின்றன. தெல்லிப்பளை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை முதலிய பகுதிகளில் இன்றும் அதன் எச்சங்களை காணமுடிகின்றது.
ஐரோப்பிய வருகையை ஒட்டி யாழ்ப்பாண வீட்டுகட்டிட அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இயற்கையை கருத்தில் கொண்டு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒற்றுமைக்கும் பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக நாற்சாரும் வீடுகள் அமைக்கப்பட்டன. பல குடும்பங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்ததற்கு இது எடுத்துக்காட்டாகும்.
நான்கு பக்க வாசல்களும் நடுவில் முற்றம் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகளின் கதவுகள் மரவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண வீடுகளின் பிண்ணனியில் சமுக பொருளாதார கட்டமைப்பு எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை அறியக்கூடியதாக அமைகின்றது. இத்தகைய வீட்டு அமைப்பு தற்போது அருகிச்சென்று விட்டது.
சாந்து, சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கல்வீடு என்றே அழைக்கப்பட்டன. அக்காலத்தில் கல்வீடுகள் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. பொருளாதார வளம் கொண்ட மேற்தட்டு மக்களே அதிகளவில் கல் வீட்டில் வாழ்ந்தனர். காலப்போக்கில் சீமெந்தின் வருகையும் இடப்பெயர்வுகளும் வீடுகளின் அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தின.
யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் நிலவிய சமுகபொறுப்பிற்கு திண்ணைகள் சாட்சிகளாய் அமைகின்றன. இங்குள்ள பாணிகளின் வீடுகளை ஒல்லாந்தர் ஆங்கிலேயர் பாணி வீடுகள் என்று கூறும் வழமையும் உண்டு. வீட்டு வளவின் வாசலிற்கு கேற் அமைக்கப்பட்டிருக்கும். இக் கேற்றினை மூடி கூரை அமைக்கப்பட்டிருக்கும். இது வழிப்போக்கர்கள் இழைப்பாறிச்செல்லும் இடமாகவும் அமைந்திருந்தன.
இந்த நாற்சார வீட்டின் வரவேற்பு அறையின் சுவர்களில் மரத்திலான மான் உருவங்கள் தொங்க விடப்பட்டிருக்கும். நான்கு பக்கமும் விராந்தை அமைக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் வீடு அமைப்பு முறமை காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருகின்றது. வீட்டினை பராமரிப்பதற்கு ஏற்றவகையில் தமக்கு அளவான வீட்டினை அமைத்து வருகின்ற போதும் சபை சந்திக்குரிய வீட்டினை கட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
0 comments:
Post a Comment