வசதி வாய்ப்புக்காகவும் சென்னையில் வாழவேண்டும் என்ற வரட்டுக் கைளரவத்துடனும் குப்பைகளுக்கும் நோய்களுக்கு மத்தியிலும் மக்கள் வாழப் பழகிவிட்டனர். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அண்டிய பகுதியில் உள்ள லாக் நகர் இந்த நகர் 1978 ம் ஆண்டு கருணாநிதி காலத்தில் நாவலர் நகர் என அழைக்கப்பட்டது பின்னர் தண்ணீரினை லாக் செய்தமையால் காலப்போக்கில் லாக் நகர் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நகரில் குப்பைகளும் கழிவுநீர்களும் நிரம்பிக்காணப்படும். நான்கு அடி உயரமான உக்கிப்போன தகரங்களால் வேயப்பட்ட சின்னச் சின்ன குடிசை வீடுகளுல் பெரிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
லாக் நகரில் 404 வீடுகள் உள்ளன. அரசின் மாற்று வாரிய திட்டத்தில் மக்களுக்கு 304 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 30 கல்நாரி வீடுகளும் 100குடிசை வீடுகளும் காணப்படுகின்றனர் சிறி நெருகமான பிரதேசத்தில் வாழ்நது வருகின்றனர். சின்ன சின்ன குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்ற போதும் இலத்திரனியல் உபகரனங்களுக்கு குறைவில்லை குளிருட்டப்பட்ட அறைகள் குளிர்சாதன பெட்டிகள் சலவையியந்திரம் என சகல வசதிகள் கொண்ட நவீன குப்பம் தான் லாக் நகர்.இப் பகுதியில் கழிவுநீர்கம் குப்பைகளும் நிரம்பிக்காணப்பட்டன இது தொடர்பாககீழ் பகுதியில் சவிக்கும் மக்கள் கூறுகையில் மேல் மாடியில் வசிப்பவர்கள் குப்பைகளை மேலிருந்தவாறே கொட்டுகின்றனர் மாமிசக்கழிவுகள் கழிவுநீர்கள் விசிறப்படுகின்றன இதனால் கழிவுநீர் தேங்கி உள்ளது. கழிவு நீரினை சுத்தம் செய்ய வரும் மாநகர சபை ஊழியர்கள் மீது குப்பைகள் வீசிறப்படுவதால் இப்போது குபபை அகற்ற வருவதில்லை எனதெரிவித்தனர் அரசினால் மாற்று வாரியத்திட்டத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன மழை நீரினை வெளியேற்ற குளாய் வசதி செய்து கொடுக்கப்பட்ட பொதும் கழிவ நீரினை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்படாமையே மெலிருந்து கழிவு நீர்கள் கொட்டப்பட காரணம்.குப்பைகள் தேங்கிக்காணப்படுவதால் புளுக்களின் வதிவிடமாக மாற்றமடைந்துள்ளது புழுக்கள் கீழ் பகுதி வீடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. இப்பகுதியில் வாழும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி பேதி வயிரோட்டம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர் .குழந்தைகள் சிறுவர்கள் வசிக்கும் இந்த நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளில் நோய்தொற்று அபாயமும் காணப்படுகின்றது.
நோய்தொற்று நிறைந்த இந்த பகுதியில் ஏன் இந்த மக்கள் தொடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நகர் மேரீனா கடற்கரையை அண்டியே அமைந்துள்ளத இம் மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடித்தல் கடற்கரையோர வியாபாரம் சுண்டல் விற்றல் போண்றன இதனால் இவர்களுக்கு மாதாந்தம் 30000 மேல் வருமாணம் கிடைக்கப்பெறுகின்றது அதனை விட சேரி புற மக்கள்எள் என்று அரச அரச சார்பற்ற நிறுவன உதவிகளும் கிடைக்கபெறுகின்றன.
இப் பகுதி மக்களின் குழந்தைகள் கல்விககாக அரசினால் பாடசாலை அமைத்து கொடுக்கப்பட்டது மதியத்திற்கு பின்னர் மாணவர்கள் வீடு சென்ற விடுவதால் ஒரு வருட காலத்திலேயே முடப்பட்டு விட்டது.
சென்னையின் கழிவு நீர்கள் அனைத்தும் கூவ நதியினுடாகவே வெளியேற்றப்படுகின்றது அந்த பகுதியை வாழிடமாக கொண்டு வாழும் மக்களின் பரிதாப நிலை தான் இது மூக்கிலே கையை வைத்து தேரிதலுக்காய் ஓட்டு கேட்க வரும் அரசியில் தலைவர்களுக்கு ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கப்படுகின்றது வாக்குறுதி மட்டும் வழங்கி விட்டு செல்பவர்களை அடுத்த தேர்தலின் போது தான் காணமுடிகின்றது. இப் பகுதி மக்களே கழிவுகளை அகற்ற முன்வராத நிலையில் நோய் தொற்று அபாயத்திலிருந்து விடுபட முடியாது. இம் மக்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக காணப்படுவதால் போதிய விழிப்புணர்வு இல்லைஇவர்களுடைய பிரச்சினைகள் எப்போது தீரும் இவ்வாறான அசிங்கம் நிறைந்த பிரதேசத்திலும் ஒரு வாழ்வா
0 comments:
Post a Comment