Pages

ஈழத்தில் பாரம் பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டிய தென்னிந்திய கலைஞன் வேனு

 ஈழத்தில் கலைகள் அழிவடைந்து வருகின்ற காலத்தில் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் இன்றைய இளம் கலைஞர்களின் ஆற்றுகையில் தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடல் அரசு வேனுவின் நெறியாள்கையில் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் 04.12.2011 அன்று பிற்பகல் 3.30 மனியளவில் யாழ்ப்பான பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரங்கேற்றப்பட்டது. தென்னிந்தியாவின் பாரம்பரியம் மிக்க சில பிரதேசங்களின் கலைகள் ஈழத்தில் முன்பு கானப்பட்டபோதும் இன்று மறைவடைந்து வருகின்றது.
கும்மி, தப்பாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம். பறையாட்டம் ஆதிவாசி நடனம்  போன்ற கலைவடிவங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆடல் பாடலுடன் இடையிடையே தனது கருத்துக்களையும் தெரிவித்த வேணுகோபால்
யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இக் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் உருவாக்கப்பட்டன. அந்த மக்கள் நாட்டார் கலைகளின் மூலமாக தமது வாழ்வியலை உலகிற்குக் காட்டியுள்ளனர். பூஜ்ஜியம் என்ற வடிவம் இல்லை என்றால் கணிதத்திற்கு பூஜ்ஜியம் என்ற சொல் இருந்திருக்காது அது போல் தான் இக் கலையும்.திருமணம கோயில் திருவிழ சாவுவீடு போன்ற நிகழ்வுகளிலேயே தப்பு அடித்து ஆடுவார்கள். இம் மரபு மறைந்து போகாது இருப்பதற்காக தமிழகத்தில் தற்போது மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மதுரையில் கொட்டு என்றும் தஞ்சாவூரில்  தப்பு எனவும சென்னையில் மேளம் என்றும் இதனைப் பல்வேறு பகுதிகளிலும் பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

என்னிடம் இக் கலையினைப் பயிலும் மாணவர்களில் ஆயிரத்தின் துளிகளாக யாழ். மாணவர்கள் இருப்பது பெருமையானது எனவும் அவர் தெரிவித்தார். கும்மி எமது பாரம்பரிய கலைவடிவமாக காணப்படுகின்ற போதும் இன்று மறைந்து செல்லும் கலைவடிவமாகும். தென்னிந்தியாவில் ஊட்டி மலைப்பகுதியில்  குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களால் விழாக்களில் போது ஆற்றுகை செய்யப்படுகின்றது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் களைப்படைந்து மாடு கலைக்கும் குச்சிகளால் அடித்து அடித்து ஆடும் கலைவடிவம் சாட்டைக்குச்சி ஆட்டமாகும். இவ்வாறான் பாரம்பரைிய கலைகளை ஏனைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கிராமிய கலை ஆர்வலர்கள் மாணவர்கள் முதியவர்கள் என ஆயிரக்கனக்கான பார்வையாளர்கள்  இந் நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர்.





0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls