Pages

இயல்பு நிலைக்கு திரும்புமா வசந்தபுரம் மக்களின் வாழ்வு நிலை?

அரியாலையில் வசந்தபுரம் கிராமமக்களுக்கான மீள்குடியேற்றம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்டிருந்தது.
 சொந்த இடங்களில் மீள் குடியேறிய மகிழ்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொன்டு தமது இருப்பிடங்களுக்கு விட்ட மகிழ்ச்சியில் குடியேறிய அரியாலை வசந்தபுரம் மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து; சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல் வேறு பகுதிகளிலும் குடியேறினர் தமது சொத்துக்களில் பெரும் பகுதியையே இழந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் குடியேறியுள்ளனர். குடியேறி 2 வருடங்கள் நெருங்கியுள்ள போதிலும் இன்னும் அடிப்படை வசதிகளே பூர்த்தி செ;யப்படாத நிலையில் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தொடர்கிறது அவர்களது வாழ்க்கைப்பயணம்.

 


 1990களில் இந்த இடத்தில் 350 குடும்பங்கள் வரையில் இருந்தனர் யுத்தம் ஏற்படுத்திய தொடர் இடப்பெயர்வுகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நாடு கடந்தும் குடியேறிய மக்கள் கால மாற்றத்தால் அங்கேயே நிரந்தர வாசியாகவும் மாறிவிட்டனர் தற்போது சுமார் 38 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்களின் வாழ்வாதார தொழிலாக கடற்தொழில் உள்ளது. வார நாட்களில் மூண்று நாட்களே கடலுக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படுகின்றது. அதில் வரும் வருமானத்தைக்கொண்டே அண்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் 03 முதல் 06 அங்கத்தவர்கள் வரையில் உள்ளனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளனர். கிணறு உட்பட அடிப்படை வசதிகளே இல்லாத நிலையிலும் அவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை தெரிகின்றது. முக்கியமான விடயம் என்னவென்றால் அங்குள்ள மக்களில் பெரும் பகுதியான குடும்பங்கள் காணி உறுதியில்லாத நிலையிலேயே அங்கு குடியேறியுள்ளனர் ஆனால் அந்த இடங்களிலேயே 30 வருடங்களுக்க முன்பே பரம்பரையாக இருந்ததாக கூறுகின்றனர் .; தற்போது அரசாங்கத்தின் உதவிகளைப்பெற்றுக் கொள்ள  காணியுறுதி தேவைப்படுகின்றது அது வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்கு வீதிகளும் சீர் அற்றநிலையிலேயே காணப்படுகின்றது. வெகு விரைவில் வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர். பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிகளவில் உள்ள போதிலும் வசந்த புரத்திற்கு அண்மையில் பாடசாலை இல்லாத நிலை காணப்படுகின்றது. பாடசாலைக்காக யாழின் மத்திய பகுதிக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. முன்பு இவ்விடத்தில் இருந்த பாடசாலை முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ளது. இங்கே ஒரு பாடசாலை அமைக்கப்படுவதை எல்லா மக்களும் வரவேற்கின்றனர்.
29 வயதான இளம் குடும்பப் பெண் கருத்து வெளியிட்டார் …………
“நாங்க முன்னாடி இந்தியா போயிருந்தோம் அப்போ நாங்க எல்லாம் சின்னப்பசங்க இப்போ வயசு ஆயிடிச்சு நாங்க ஓடித்திரிந்த இடமெல்லாம் பாக்க சந்தோசமா இருக்கு ஆனா முன்ன இருந்த மாதிரி இடமில்ல எல்லாமே அழிஞ்சு போயிடிச்சி நினைக்கும் போது கவலையா இருக்கு நான் இந்தியாவிலே டிளஉ கெமிஸ்ரி படிச்சிருக்கேன் நம்ம இடத்துக்கு விடுறதா சொன்னாங்க ஆரம்பத்துல இந்தியாவ விட்டிற்ரு வரப்பிடிக்கல குடும்பத்தாரோட வந்புறுத்தலால வரவேண்டியாரிச்சு. இங்க வந்ததும் அப்பாவோட தங்கச்சி மகனையே கல்யாணம் பண்ணி வச்சிற்றாங்க அவரு கடற்தொழில் பண்றாரு என் படிப்புக்கு ஏற்ற வேலை இங்கே கிடைக்கல தொடர்ந்து முயற்ச்சி பண்ணிட்டிருக்கேன்.”
இங்கு இருக்கும் வசதிகள் தொடர்பில்……………………..
“சொந்த இடத்தில குடியேறினது மட்டும்தான் சுகாதார வசதிகள் ஒண்டுமில்ல நீங்ளளே பாக்குறீங்கதானே மழை பெஞ்சா தண்ணி உள்ள வந்திடும் குழந்தைப்பிள்ளைங்கள வச்சிருந்தா கஸ்ரம்தான் வருத்தங்கள் வரும் ஆஸ்பத்திரிக்கு ரவுணுக்குத்தான் போணும். இந்தக்காரணத்துக்காகவே நிறையக்குடும்பங்கள் இங்கே வர விரும்பவில்லை எமக்கிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பல அதிகாரிகளுடனும் பேசினோம் ஆனால் எந்த பிரயோசனமும் இல்லை.”

இவ்வாறாக அங்குள்ள ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு பிரச்சனைகளுடனேயே வாழ்கின்றனர்.
தங்கமணி (வயது56) இங்க இருந்து இடம் பெயர்ந்து போகும் போதும் இங்க இருந்த எல்லாத்தையும் விட்டிற்றுப்போனோம் அங்க போய் உழகை;கிறதில மிச்சம் பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா சொத்து வாங்கினோம் பிறகு இங்கு வாறென்டாப்போல எல்லாத்தையும் வித்திற்று இங்;கே வந்து இப்ப ஒண்டுமே இல்லாம இருக்கோம் பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்னு இருக்கு பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி வசதி இல்லை சுகாதார வசதி இல்லை இதண்ணி வசதி இல்லை எல்லாமே பிரச்சனையாவே இருக்கு எல்லாம் தாறன் என்டுறாங்க ஆனா ஒன்டுமே தாறாங்க இல்லை. இவ்வாறு கண்ணீருடன் தனது கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டார்.

மக்கள் இன்னும் எதிர்பார்ப்புகளுடனேயே தமது வாழ்நாளைக்களித்துக்கொன்டு இருக்கின்றனர் இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே!..........

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls