இலங்கையின் வடக்கில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த நாகர்கோவல் மக்கள் உள்ளராட்சித் தேர்தலை ஒட்டி மீளவும் குடியமர்த்தப் பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாடகை வீடுகளில் வாழ்ந்து மக்கள் இன்று தம் சொந்த நிலங்களில் குடியேறியுள்ளனர். இம் மக்களுக்க அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது .நான்கு தகரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இம் பிரதேசம் இப் பிரதேசம் முழுவதும் மிதிவெடி கவனம் என்ற பதாகைகள் அச்சுறுத்திய வன்னம் உள்ளன அங்கு ஒரு சில குடும்பங்களுக்கு இந்தியன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.சொந்த இடங்களில் குடியேறியுள்ள மக்களுக்கும் சில நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றது
தொலைந்து போன சந்தோஷங்களை இந்த மண் மீண்டும் திருப்பித் தருமா சோலைபோல காட்சி தந்த மண் பதினைந்த வருடங்களின் பின் வெறிச்சோடிக் காணப்படுவதை பார்க்கும் போது நெஞ்சு வெடிக்கதம்மா என்றார் இமானுவேலு மேலும் வாடகை வீடுகளில் பெரும் கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம் இப்போது சொந்த மண்ணில் மீளவும் குடியேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது என தெரிவித்தார். முpதிவெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை கால்கலை வைக்கவே பயமாக இருக்கின்றது குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கின்றோம் என் ராஜேஸ்வரி தெரிவித்தார்
எனது கணவர் ஆட்டோ ஓட்டுகின்றார் குடும்ப வருமாணம் ஆறுநூறு ரூபா அது என் குடும்பத்திற்கு போதாது எனக்கு மூன்று பிள்ளைகள் உலர் உணவு இன்னமும் வழங்கப்படவில்லை நாம் மிகவும் கஸ்ரத்துடனே வாழ்கின்றோம் என் கவலையுடன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் விஜயா
இந்த நாகர் கோவில் கிராமம் ஏனைய கிராமங்களைவ p பதினைந்து வருடங்கள் பின்தங்கியே காணப்படப்போகின்றது இக் கிராமத்தினை ஏனைய கிராமங்களுடன் இணைத்து கட்டியேளுப்ப வேண்டியது அரசினுடைய கடமையாகும் தேர்தலுக்காக குடியேற்றப்பட்ட மக்களுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்கபெறாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் இம் மக்களின் பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்
0 comments:
Post a Comment