Pages

யூனியன் கல்லூரிக்கு அண்மையில் உள்ள தேவாலயம் அழிவின் விழிம்பில்



தற்போது உள்ள தேவாலயம்
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 196 ஆண்டுகள் பழமை வய்ந்த வரலாற்றுப் பெருமைமிக்க அமெரிகன் மிஷன் தேவாலயம் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
இன்னும்; நான்கே வருடங்களில் தனது 200 ஆவது வயதைத் தொடவுள்ளது இந்தப் பழம்பெரும் தேவாலயம்.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடு இத்தேவாலயத்தின் வரலாறும் ஆரம்பிக்கின்றது.போத்துக்கேயர் தம் மதப்பிரச்சாரத்தினை செய்யும் நோக்குடன் இவ்விடத்தில் தேவாலயத்தை அமைத்தனர். ஆயினும் இலத்தீன் மொழியிலேயே போதனைகள் இடம்பெற்றன. தமது மதப்பிரச்சாரத்திற்கு மொழி நடையாக இருப்பதை உணர்ந்த போர்ததுக்கேயர் அதன் விளக்கத்தை நிகழ்வுகளாக நிகழ்த்திக்காட்டும் நோக்குடன் தேவாலய அருகில் மேடையை அமைத்தனர். அந்த மேடை போர்த்துக்கேயர் காலத்தில் தேவாலயம் இருந்தது என்பதை காட்டுகின்றது. 

அக்காலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களை காரணம் காட்டி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இந்துக்கள் கிறிஸ்தவர்களாக  மதமாற்றப்பட்டனர். இந்தத் தேவாலயத்தினூடாகவும் அக்காலத்தில் தீவிர மதப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக தெல்லிப்பளை மக்கள் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறினர். அந்தப் பகுதியில் இருந்த கட்டடங்கள் பல யுத்தத்தால் சிதை வடைந்தன.ஆயினும்  யுத்தத் தின் மத்தியிலும் பாரிய சேதங்கள் ஏதுமின்றித் தப்பி இன்றும் கம்பீரமாக காட்சி தருகின்றது இத்தேவாலயம்.

1816ம் ஆண்டு பாலன் பாதிரியார் தலைமையிலான குழு ஒன்று தற் போதிருக்கும் தே வாலயதின் இடத் ;தில் வந்திறங்கிய போது ஒரு புளியமரம் மட்டுமே இருந்தது. அந்த புளிய மரத்திற்கு நேரே சிறிது தூரத்தில் இத்தேவாலயத்தை அமைத்தனர். மதப்பிரச்சாரத்துடன் கல்விநடவடிக்கையையும் முன்னெடுக்கும் நோக்குடன் 7 பேருக்கு புலியமரத்தின் கீழ் கல்வி போதித்தனர். இன்றும் இப் புளியமரம் தமது கிளைகளை தவறவிட்டபடி காணப்படுகின்றது. 

இப்படியாக வந்திறங்கிய குழு தேவாலயத்தில் இருந்தே தமது மதப்போதனைகளைச் செய்து வந்துள்ளனர். இங்கு மதப்போதகர்களாக இருந்தவர்கள் சிறிது காலத்தில் இறக்க தேவாலயத்தின் அருகிலேயே அவர்களுக்கான சமாதிகள் கட்டப்பட்டன. இன்றும் இச்சமாதிகள் அழிவடையாமல் வரலாற்றை கூறி நிற்கின்றன.இங்கு வந்து தம் பணிகளை செய்தவர்கள் நோய்த்தாக்கம் காரணமாகவும் ஒவ்வாத காலநிலை காரணமாகவும் மிகக் குறைந்த வயதில் உயிரிழந்திருந்தனர் என்பதை இக் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் கூறுகின்றன.
தேவாலய வளவில் அமைந்துள்ள கல்லறை

1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்குப் பின்னர் இத்தேவாலயத்தைப் புனரமைப்பு செய்வதற்கு அமெரிக்க மிஷனரியினர் பல  முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் சில திருத்த வேலைகளையும் செய்திருந்தனர். இருப்பினும் தென்னிந்திய திருச்சபையின் பிளவு காரணமாக இத்தேவாலயம் இன்னும் திருத்தப்படாமலேயே உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது இந் தேவாலய மக்களின் உதவியுடனும் திருச்சபையின் உதவியுடனும் தேவாலயத்தை திருத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

200 வருடங்களை காணப்போகும் இத்தேவாலயம் திருத்தப்படாமல் கண் முன்னாடியே அழிவடைந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இத்தேவாலயத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிடம் ஒப்படைத்தால் கல்லூரி நிர்வாகம் இதனை சிறப்பாகப் பராமரிக்கும் என கல்லூரியின் ஊடக ஆசிரியர்  சேந்தன்  தெரிவித்தார்.
பாலன் பாதிரியார் வந்திறங்கிய போது நின்ற புளிய மரம்

இரண்டு நூற்றாண்டு வரலாற்றுச் சின்னமான இத்தேவாலயத்தினை பேணிப்பாதுகாப்பது சமூகத்தின் கடைமையாகும்.

எதிர்காலத்தில் சுற்றுலாத்தலமாக உருவாக் கக்கூடிய இத் தேவாலயத்தை உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இத்தேவாலயத்தை புனரமைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இத்தேவாலயத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.  

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls