மாரிகாலத்தில் உணவுத் தட்டுப்பாடு எதிர்கொள்ளும் முகமாக சீனமக்களை கதைக்களமாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது. அதாவது வறுமையானது எவ்வளவு இழிந்த நிலைக்கு மனிதனை உட்படுத்துகின்றது என்பதனை மிகவும் சிறப்பாக விளக்கி நிற்கின்றது. அதேவேளை நாநோக் என்பவருடைய குடும்பமானது உணவினைத்தேடி பனிப் பாறைகளினூடாக ஒரு கடற்கரையை நோக்கிச் செல்கின்றது. அவர்கள் பனிப்பறைகளினூடாகச் செல்வதற்கு பாதுகாப்பாக நாய் உதவுகின்றது. மேலும்; இவர்கள் உணவினைத்தேடி பல இடங்கள் அலைவதனையும் காணமுடிகின்றமை எல்லோர் மனங்களையும் ஈர்க்கக்கூடியதொன்றாக விளங்குகின்றது.
அதாவது இங்கு ஒரு குடும்பமானது எப்படி வாழ்கின்றது. மற்றும் ஆதிகாலத்தில் மனிதன் எப்படி வாழ்ந்தான் அவன் எப்படி உணவுகளை உட்கொண்டான் என்பதனை தெட்டத் தெளிவாக எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இவர்கள் அவ் உணவுகளைப் பிடிப்பதற்கு நாயினையே பயன்படுத்தி வந்தனர். கடலில் இருந்து பெறப்பட்ட மீன்களையும்ää பனிக்கரடிகளையும்ää கீரிகளையும் உணவாக உட்கொண்டனர் பனிக்கட்டிகளை நெருப்பினால் உருக்கி நீராகவும் பருகினார்கள். இவர்கள் தம் உணவினை பச்சையாகவே உண்ணுகின்றனர். இதன் மூலம் இன்றைக்கும் இப்படியான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பது புரிகின்றது. மேலும் இவ்விலங்ககளில் இருந்து கிடைக்கம் தோல்களை பனியினைத்தாங்கும் உடைகளாக அணிந்தனர். இவர்கள் தமது பாதுகாப்பிடமாக பனிக்கட்டியில் குகைகளை உருவாக்கி அதனுள் வாழ்கின்றனர். நானோக் வேட்டையாடுவதற்குப்பயன்படுத்தப்படும் அம்பு எய்தல் முறையினை தனது பிள்ளைக்கும் கற்றுக்கொடுக்கிறார் மேலும் இவர்கள் இந்தநிலைக்கு செல்வதற்கு அவர்களது சமுதாயம் தான் காரணமா? அல்லாது விட்டால் அவர்கள் எல்லோராலும ஒதுக்கப்பட்டப்பட்டனரா? இவர்களது முன்னேற்றம் கருதி யாருமே ஏன்கவலைப்படவில்லை? என்பதினை நோக்கும்போது சமுதாய மக்களின் மனிதநேயமற்ற செயற்பாடுகளும் எடுத்து விளக்கப்படுகின்றது.
சில சமயங்களில் நாய்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுகின்றது இதனை தனித்து நின்று சமாளிப்பவனாகவும் தனது குடும்பத்தை தனித்துநின்று காப்பாற்றுபவனாகவும் நானோக் விளங்குகின்றான். இந்த வகையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவுத்தட்டு;ப்பாட்டினால் ஏற்படும் ஒரு சீனக்குடிமக்களின் குடும்ப நிலையினை எடுத்துக்காட்டுவனவாக இத்திரைப்படம் அமைகின்றது.

0 comments:
Post a Comment