Pages

விடுதலைக்காய் தழிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றினைத்த தேசிய காங்கிரஸ்

பிரித்தானியர்கள் இலங்கையை தம் முடிக்குரிய நாடாக 1815 ம் ஆண்ட பிரகடணம் செய்தனர. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை பெற வேண்டும் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றினைந்தனர். 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற மத உணர்விற்கான இயக்க செயற்பாடுகளும் 19 ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் தோற்றம் பெற்ற மது ஒழிப்பு இயக்கமும் பிரித்தானியர்களுக்கு எதிராக இலங்கையர்களை மாற்றியது.
கண்டி இராச்சியத்தை பிரித்தானியர்கள் கைப்பற்றி நூற்றான்டு விழா 1915 ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தம்பளையில் சிங்கள மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது கலவரத்தை அடக்குவதற்கு பிரித்தானியர்கள் அடக்குமுறையை கையாண்டனர் .அதனை ஒரு தருணமாக பயண்படுத்தி தமக்கு டிதிராக செயற்பட்ட தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன் கைது செய்து பிரித்தானிய சிறையில் அடைத்தனர். இதில் சிங்கள தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை கர்பாற்ற ஆங்கிலம் படித்த இலங்கையரான சேர் பொன் அருனாசலம் பிரித்தானியா சென்று சிறையிலிருந்து இவர்களை மீட்டெடுத்தார். பிரி;த்தானியர்களின் இந்த செயற்றபாடு இலங்கையர்களை pரித்தாணியர்களுக்கு எதிரான உணர்வுடையவர்களாக மாற்றியது. இந்த கலவரமே தேசிய காங்கிரஸ் என்ந அமைப்பை தோற்றுவிக்க உடனடிக்காரணமாகவும் அமைந்தது.
இந்தியாவின் விடுதலைக்கான இந்திய தேசிய காங்கிரஸ்என்ற அமைப்பு பொராடிக்கொண்டிருந்தது. 1917ம் ஆண்டு இந்தியர்களுக்கு பிரித்தானியா மொண்டேகீஸ் என்ற சீர்திருத்தத்தை வழங்கியது. இது இந்தியர்களுக்கு சுயாட்சியை வழங்குவதாக அமைந்திரு;தது.இந்தியாவிற்கு வழங்கப்பட்ட சீர்திருத்தம் போன்று தமக்கும் ஒரு சீர்திருத்தம் வேண்டும் என இலங்கையர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இந்தியா இச் சீர்திருத்த்தை பெற தேசிய காங்கிரஸ்சும் அதன் தீவிர செயற்பாடுமே காரணம் என உணர்ந்த இலங்கையர்கள் தேசிய ககாங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்க முன்வந்தனர்.
1915ம் ஆண்டு அரசியல் சீர்திருத்த மாநாடு உன்று இடம்பெற்றது. இதில் இலங்கையின் வேறுபட்ட அரசியல் தலைவர்கள் பலர் பங்கு பற்றினர். நாங்கள் ஒன்றுபட்டு கோரிக்கைகளை முன்வைத்தால் பிரித்தானியர்கள் அதனை புறக்கனிக்க முடியாது தாம்பிளவு பட்டிருப்பதே அவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கின்றது. இதனை தடுக்கவேண்டுமாயின் இயக்கங்கள் ஒன்றினைந்து தேசிய ஈதியான ஒரு அமைப்பை ஸ்தாபிக்க வேண்டும்.இதன் படி 1919ம் ஆண்டு தேசிய காங்கிரஸ் ஒற்றுமைப்பட்ட அமைப்பாக உருவாகியது. சேர் பொன் அருனாசலம் தலைமையிலான தழிழ் அமப்பும் ஏ.ஜி குணசிங்க தலைமையிலான் இளம் இலங்கையர் கழகமும் கண்டி தேசிய அசெம்பிளி கரையோர சிங்கள இயக்கமும் ஒன்றினைந்தனர். இதற்கு தலைவராக படித்த இலங்கையர் என்ற வகையில் தழிழரான சேர் பொன் அருனாசலம் தலமை வகித்தார்.
இது தழிழ் சிங்களவர் என்ற பேதமின்றி பிரித்தானியர்களுக்கு எதிரான சுதந்திரத்திற்காய் போராடும் அமைப்பாக உருவாகியது.
இலங்கையர்களுக்கு பிரித்தானியாவிடம் இருந்து பொறுப்பாட்சியை பெற்று அதனை சுதந்திர நாடாக்குதலை நோக்கமாக கொண்டிருந்தது. பிரித்தானியர்கள் பெருந்தோட்டபயிர் செய்கையில் ஈடுப்ட்டமையால் இலங்கையின் சுதேசிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனை கட்டியேழுப்புதல். பிரித்தரிய பாடசாலைகளில் வசதியற்ற வர்களுக்கு கல்விவாய்ப்பு வழங்கப்படவில்லை. எல்லோர்க்கும் கல்வி வாய்ப்பினை வழங்குதல். இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுதல்  இங்கு படித்தவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் இலங்கையர்கள் சிலருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவழங்கப்படவில்லை. பெருந்தோட்ட பயிர்செய்கைகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் சிறுவர் ஊழியத்தை ஒழித்தல். இலங்கையில் மாநகர சபைகளையும் நகரசபைகளையும் நிறுவுதல்.
பிரித்தானியர்களுடன் பிரித்தானிய கலாச்சாரம் பண்பாடு மதம் இலங்கையில் உட்புகுந்திருந்தது. மதத்தினை பரப்புவதை பிரித்தானியர்கள் நோக்கமாக கொண்டிருந்தனர். எம் மத கலாச்சாரம் பண்பாட்டினை அழியாது பாதுகாத்தல்.
இச் தேசிய காங்கிரஸ்சின் தீவிர செயற்பாட்டையும் மூவின மக்கள் ஒன்றினைந்து செயற்பாட்டையும் அவதானித்த பிரித்தானிய ஏகாதிய தலைமைத்துவம் மனிங் பிரவுவை இலங்கைக்கு அனுப்பியது. மனிங்கின் இரகசிய செயற்பாடுகளும் சிங்களவருடனான இரகசிய சந்திப்புக்களும் தழிழர்களையும் சிங்களவர்களையும் இன ஈதியாக பிரித்தது. மக்களின் சுதந்திரத்திற்காய் ஒன்றுபட்டு போராடும்என்று எதிர்பார்கப்பட்ட அமைப்ப ஆயுட்காலம் முழுவதும் ஒற்றுமைப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை. 1919ம் ஆண்டு தொடங்கப்பட்டு1921ம் ஆண்டு முதலாவது பிளவை சந்தி;த்து. தழிழர்கள் தமக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை எனகூறி தாம் அரசியல் ஈதியாக ஏமாற்றப்படுகின்றோம் என்று சேர் பொன் ஆரனாசலம் தலைமையிலான குழு பிரித்து சென்றது தழிழர்களும் சிங்களவர்களும் இனஈதியாகன முரன்பாடு இன்று வரை தொடர அன்றே அத்திவாரம் இட்டுள்ளனர்.
தேசிய காங்கிஸ்சின் பிளவுகளும் தழிழர்கள்  ஏமாற்றப்பட்டமையும் அடுத்த இணைப்பில்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls