Pages

தீராத பிரச்சினையுடன் புகையிரத வீதிக்குடியிருப்பு

  
வடக்கில் இடம் பெயர்ந்தவர்கள் மீளவும் குடியமர்த்தப்பட்ட வண்ணம் உள்ளனர். ஏப்போது எம் மீள்குடியேற்றம் என ஏங்கிய வண்ணம் வாழ்கிறார்கள் பலாலி வசாவிளான் மக்கள். இம் மக்கள் யுத்தத்தின் பொது இடம்பெயர்ந்து தற்போது சுன்னாகம் புகையிரத வீதியை வதிவிடமாக கொண்டு வாழ்ந்து வருகினறனர். இம் மக்களுக்கு அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். இங்கு முப்பது குடும்பங்களுக்கு மேல் குடி வந்தோம் தற்போது ஆறு  ஏழு குடும்பங்களே வாழ்கினறோம் வசதி குறைபாடு காரணமாக வாடகை வீடுகளுக்கு சென்று விட்டனர் என்றார் சின்னையா என்ற எழுவது வயது பாட்டனார். இங்கு வசித்தவர்களில் பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பங்களே அதிகம் இக் குடியிருப்பு வீதியோரக் குடியிருப்பு சுன்னாகம் நகரத்திற்கு செல்லும் மக்கள் இவ் வீதியுடாகவே பயனிக்கின்றனர்.


இங்கு குளாய் கிணறு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் குளிப்பதற்கு அயல் வீடுகளுக்கு செல்லும் நிலை காணப்படுகின்றது இந் நிலையில் சில குடும்பங்கள் வாடகை வீட்டை நோக்கி சென்று விட்டனர். 

நாம் குடிசை வீடுகளை அமைத்தே வாழ்ந்தோம் பின்னர் அரச அரசசார்பற்ற நிறுவன உதவியுடன் இன்று செங்கற்களை கொண்ட வீட்டை அமைத்துள்ளோம.; எம் சொந்த மண்ணில் விட்டால் நாம் தொழில் செய்வோம் இங்கு தொழில் செய்யும் வசதியில் நாம் இல்லை இப்போது கூலி வேலை செய்தே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. புழைய இரும்புகள் சேகரித்து விற்றே வாழ்க்கை நடத்துகின்றோம். ஆதனை விட தும்புத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம் எமக்கு இந்த வருமாணம் போதாது. எனது குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் கஸ்ரபடுகின்றேன் என தன் மன்குழுறல்களை கூற தொடங்கினார் தர்சினி சிவநாதன். ஏனக்கு 26 வயது தான் ஆகின்றது சிறு வயதிலேயே திருமணம் செய்து விட்டேன். எனது கணவர் கூலி வேலை செய்கின்றார் எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கு தினமும் வேலை கிடைக்காது. சில வேலைகளில் சாப்பாட்டிற்கே கஸ்ரப்படவேண்டி இருக்கும். என்றார்.  

இக் குடும்பங்களுக்கு அரச அரச சார்பற்ற நிறுவணங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். பொது மலசலகூடம் குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இவர்கள் வசிக்கும் இடம் அரசிற்கு சொந்தமான சட்டவிரோத குடியிருப்பாகும். 

வேறு இட மக்கள் தம் வீட்டுக்குப்பைகளை புகையிரத வீதியோரமாக கொண்டுவந்து கொட்டுகின்றனர். பிறந்த நாய்க்குட்டிகளை இங்கு கொண்டுவந்த விட்டு செல்கின்றனர். இதனால் இக் குட்டிகள் இறந்து துர்நாhற்றத்தால் இவ் விடம் மாசடைகின்றது. 

டெங்கு நுளம்புத்தாக்கம் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் இவர்கள் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுகின்றனர். இதனால் நாம் தான் பாதிக்கப்படுகின்றோம் என்றார் தும்புத்தொழில் செய்யும் கதிரேசன். நூம் தான் இவ்விட்த்தை வாரம் ஒரு தடைவ துப்புரவு செய்கின்றோம். இங்கு குப்பைகளை கொட்டவேண்டாம் என கூறினாலும் இரவு வேலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இந்த சமுதாயத்தில் முகாம் மக்கள் என்ற தவறான கருத்தும் ஏழனப்பார்வையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஏம் பிரச்சினைகள் எப்போது தீரும் எம் சொந்த மண்ணிற்கு எப்போது செல்வோம்.ஏங்கங்களோடு களிகின்றது இம் மக்களின் வாழ்க்கை 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls