வடக்கில் இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்நத தெல்லிப்பளை வீமன் காமன் மக்கள் இன்று யுத்தம் முடிவடைந்த நிலையில் மீள குடியமர அனுமதிக்கப் பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயமான பிரகடனப் படுத்தப்பட்டு இருந்த இப்பகுதி இன்று மக்கள் வாழ்வதற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரவோடு இரவாக நாம் இடம்பெயர்நத சென்றோம்.
நாம் எந்த பொருட்களும் இன்றி சென்றதால் பின்னர் மீண்டும் சண்டை நடந்து கொண்டிருந்த போது வந்தேன் வந்து எனக்கு வாழ்வழிக்கும் கால்நடைகளை அவிட்டு சென்றேன் இடமின்றி வாடகை வீடுகளின் வாழ்ந்தேன் தற்போது மல்லாகம் குளமங்காலில் வாழ்ந்து வருகின்றேன் என்றார் சின்னையா கதிரேசன்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் நான் சின்ன வயதிலேயே விவசாயம் செய்ய தொடங்கி விட்டேன் நான் அதிகம் படிக்கவில்லை. எனக்கு மூன்று பிள்ளைகள். நான் இடம்பெயர்ந்து செல்லும் போது வாழ வழிதெரியாத நிலையிலேயே சென்றேன். எனக்கு விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. பால் விற்றே என் பிள்ளைகளை படிக்க வைத்தேன்.
நாம் சொந்த மண்ணை விட்டு சென்றதால் இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு விட்டேன.; இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்வதும் வாடகை வீட்டில் இருந்தால் ஒரு வருடத்தில் எழுப்புவார்கள். நூம் வாடகை வீட்டில் திருத்தங்களை செய்கின்றோம். உனனே நாம் எழுப்பப்படுகின்றோம் இதுவரை நாங்கள் பதினைந்து வீட்டுக்கு கிட்ட மாறிட்டம். என்றார்.
இந்த மண்ணை விட்டு போகும் போது என் பிள்ளைகளுக்கு சின்ன வயது இன்று அவர்கள் கலியாணம் செய்து விட்டார்கள். இன்று இங்க எந்த வசதிகளும் இன்றி இருக்கின்றது. வீடுகள் எல்லாம் இடிந்து விட்டது. நான் தினமும் வந்து திருத்த வேலைகளை செய்கின்றேன். முpதிவெடி அபாயம் காணப்படுகின்றது மின்சார வசதிகள் இணைப்பு வழக்கப்படும் வரை மக்கள் மீள குடிமர்வது கடினம் எனவும் தெரிவித்தார்.
இவளவு காலமும் வழங்கப்பட்ட உலர் உணவு இப்போது எனக்கு வழங்கப்படவில்லை. எனது மகன் இன்று அரச வேலையில் இணைக்கப்பட்டுள்ளான் இதனால் எனக்கு எந்த உதவிகளும் இல்லை என கூறுகின்றனர். ஏமக்கு உதவிகள் வேண்டாம் ஆனால் நாம் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித்தாருங்கள் என்றார்.
0 comments:
Post a Comment