Pages

சிங்கார சென்னையின் சிதறுண்ட கோலம் [இந்தியாவின் எதிர்காலம் வீதியில்}

"அக்கா பசிக்குதக்கா ஏதாவது வாங்கிக்கோக்கா ஜஞ்சு சங்கு பத்துருவாக்கா" என்ற குரல் இன்றும் என்காதுகளை தொட்டுச் செல்கின்றன. கொட்டும் மழையில் நடுங்கியபடி சென்று கொண்டிருந்த என்னை பின்னிருந்து ஒரு குரல் திரும்பி பார்க்க வைத்தது. குளிரில் நடுங்கியபடி சங்குகளை கையில் வைத்து பசிக்காக விற்றபடி நின்றால் ஒரு சிறுமி பார்ப்பதற்கே பரிதாபமா இருந்தது. . பெய்துகொண்ருந்த மழையை கூட பொறுப்படுத்தாமல் வரும் சுற்றுளாப் பயணிகளிடம் கூவிக்கூவி விற்றால் சில கரங்கள் அவளை கண்டுக்காமலே சென்றன சிலர் அவளிடம் சங்கு வாங்கிச்சென்றனர். பிச்சை எடுகக்காமல் சுயமாக விற்று வாழ்கின்றாளே என நினைத்துக்கொண்டேன். இத்தகைய அவலங்களை சந்திக்கும் தருணம் தருணமாயினும் இதனை பெற்றுத்தந்த பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளே. சில அனுபவங்கள் நினைத்தாலே சிரிக்கனும் போல இருக்கும் சில நினைவுகள் என் வாழ்க்கைக்கான பாலமாய் அமைந்துள்ளன. நாம் இந்தியா செல்லப் போகின்றோம் என்றதும் என் கண்முன்னே வந்தது கோவில்களும் சிற்பங்களும் கட்டிடங்களும் நிறைந்த சிங்காரச் சென்னைதான்.ஆனால் சென்று இறங்கியவுடன் என் மனதில் இருந்த நினைப்புகள் அனைத்தும் தவறு என என்னிக்கொண்டேன். நாம் என்ன செய்யமுடியும் இந்தியா பற்றிய தவறான கருத்துக்களை பரப்பியது தொலைக்காட்சியும் சினிமாவும் தான்.

நாம் சினிமாவில் பார்க்கும் இந்தியாவிற்கும் நேரில் பார்க்கும் இந்தியாவிற்கும் நிறையவித்தியாசம். பள்ளிசெல்லும் சிறுவர்களை வேடிக்கை பார்க்கும் ஒரு சில சிறுவர்கள். இதை நினைக்கும் போது எம் நாட்டை நினைத்து பெருமைப் பட்டேன்.எமக்கு இங்கு இலவசக்கல்வி அதுவும் கட்டாயக்கல்வி பாடசாலை செல்லாத சிறுவர்கள் அனைவக்கும் இன்று கல்வி கற்கும் வாய்ப்பு இலங்கையில் உண்டு எம் நாட்டில் பாடசாலை செல்லும் சிறுவர்களை வீதியில் காணமுடியாது.
 
இலவசசக்கல்வி இலவச பாடநூல் இல்லாமே இலவம் அதிலும் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கொடுப்பணவு இது தான் இலங்கை கல்வியறிவு வீத உயர்வுக்கு காரணம். பாரததிருநாடு செய்த மாபெரும் தவறு ஒரு சிலருக்கு கல்விவாய்ப்பு ஒரு சிலருக்கு வாய்ப்பு வழங்காமை. அதனை விட தனியார் பாடசாலை. எத்தனை மாணவர்களை வீதியில் பிச்சை எடுக்க சென்றுள்ளது. பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஜஸ் விற்பதும் சுண்டல் விற்பதுமாய் களிகின்றது அந்த பள்ளிசிறார்களின் கனவுகள். படித்தவர்கள் தொடர்நதும் படித்தவர்களாகவும் படிக்காதவர்கள் தொடர்ந்தும் படிக்காதவர்களாயும் உருவாகும் நிலை

கல்வி கற்கும் வயதில் தொழில் செய்யும் சிறுவர்களின் எதிர் காலம் தான் என்ன. நாளைக்கு இவர்கள் என்ன செய்ய போகின்றார்கள் இன்று படித்துவிட்டு பட்டத்தை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் இளையர்களுக்கே தம் எதிர்காலம் என்ன என தெரியாத போது படிக்காமல் வீதியில் நிற்கும் சிறுவர்களின் எதிர்காலம் என்ன.
கையில் சங்குகளையும் ஒட்டிய வயிற்றுக்கு உணவு தேடி அலையும் தீவிர பார்வையும் கால்களில் சப்பாத்து அணிந்து கையில் பைகளை கொண்டு நடக்கும் தன் போன்ற சிறுவர்களை தூரத்தில் நின்று பார்த்து ஏதுமற்ற நிலையை நினைத்து புலம்பும் இந்த சிறார்கள் அ என்ற வார்த்தையை எழதத்தெரியாமல் விஞ்ஞான யுகத்தின் வளர்ச்சி்க்கு எப்படி ஈடுகொடுக்க போகின்றன.
ஏழை பெற்றோர்களுக்கு குழந்தைகளாய் பிறந்ததற்ககாய் தன்னையும் தன் சகோதர உறவுகளையும் பாதுகாக்கும் கடமையை கையில் எடுத்து தன் எதிர்காலத்தை கழி தோண்டி புதைத்துவிட்டு சுண்டல் டப்பாவையும் சங்கு பொன்ற சின்ன சின்ன பொருட்களையும் நம்பி சுட்டெரிக்கும் வெயிலையும் புள்ளரிக்கும் குளிரையும் பொருட்படுத்தாது தம்மை தான்டி செல்லும் கால்கள் ஒரு தடவையேனும் நின்று விடாதா என்று தம் குரல்களை உயர்த்தி கூவி கூவி பின்தொடரும் இந்த சின்ன பிஞ்சுகளின் கதறல்கள் யார் காதிலும் விழுவதில்லை. ஆடம்பரமாய் வாழும் உறவுகள் இந்த பிஞ்சுகளின் சுயமாய் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்திற்காகவாவது ஒரு சங்கு வாங்க கூடாதா.....? அல்லது இவர்களின் எதிர்காலம் உங்கள் கண்களிற்கு தெரியாதா...?

நாளைய வல்லரசு என்று தம்மை தமே புகளும் பாரத இந்தியா இந்த சிறவர்களுக்கு என்ன பதில் சொல்லும் படிக்கும் காலத்தை தவற விட்டு விட்டுபின்னர் என்ன செய்யப்போகிறார்கள் ஒருவர் இருவர் அல்ல திரும்பும் இடம்மெல்லாம் படிப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டிற்காய் கையேந்தும் சிறுவர்களே இதனை பார்க்கும் போது இலங்கை ஒரு சிறந்த நாடே எல்லோருகக்கும் கல்வி வாய்ப்யு வழங்குகின்றது
படிப்பை விடும் சிறுவர்களை தேடிச் சென்று வழங்கும் கல்வி வாய்ப்பு நாளைய தலைமுறை படித்தவனாக இருக்க வேண்டும்.ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி ஒரே சீருடை ஒரே கல்வி சமனான மனிதர்களை உருவாக்க மனங்களில் விதைக்கின்றது சமத்துவத்தின் தீப்பிளம்பை......
படித்த வர்க்கத்தின் முன் எழுதியதை வாசிக்க தெரியாமல் இடம் விட்டு இடம் நகர முடியாமல் அடுத்தவர் கைகளை தட்டி நிற்கும் ஒரு சந்ததியின் எதிர்காலத்தை யோசித்து பாருங்கள் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாட்டை வலுப்படுத்தி ஒரு புரட்சிக்கு வழி வகுக்கின்றீர்களா,?
பாதையோரம் துண்டுவிரித்து படித்தவன் போடும் காசுக்காய் செல்லும் கால்கள் நிற்காதா என்ற ஏ்க்கத்துடன் நாளைய சந்ததியும் அமர்ந்திருக்கும் 
இந்திய நாடே விழித்துக்கொள் உன் சிறார்கள் நாளை தெரிவில் நிற்பதை நீ அனுமதியாதே...................

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls