Pages

யாழ் நகரில் வலம் வரும் அந்தக் காலக் கார்கள் { சுற்றுளாப் பயனிகளின் பெருமைக்குரிய வாகனம் }

 என்னதான்  புதிய கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் பழையவற்றிக்கு உள்ள மதிப்பே தனி தான். புதுமை விரும்பிகள் இருப்பதை போல பழமை விரும்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பழய உற்பத்திகளுக்கான  பெறுமதி தனித்துவமானது. பழைய கார்களின் வரலாறுகளும் தனித்துவம் வாய்ந்தவை . கார்கள்  இங்கிலாந்தில் தான் ஆரம்பத்தில் உற்பத்தியாகின.
அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்  கேம்பிறிச் அம்பாசெட் கார்கள் மானிஸ்   மைனர் வகை கார்கள் இன்றும் யாழ் மண்ணில் பாவனையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்த கார்களை வாய் பிளந்து பார்க்கும் ஒரு சில  கூட்டத்தை பார்க்கும் போது வியப்பாக உள்ளது.  இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட, ஏனைய மாவட்டங்களில் நகரங்களில்  பழைய ரக கார்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் ஆளுனர்களாலும் , அதிகாரிகளாலும் போக்குவரத்துக்கு இக்கார்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.  பிரயாணிகளை ஏற்றி இறக்கும் கார்டக்ஸி சவாரி 1970,1980காலப்பகுதியில் பிரபல்யம் பெற்றதாக காணப்பட்டது.

வீதிகளின் மாட்டுவண்டிகளும் நிக்சா வண்டிகளும் சைக்கிள்களும் பயனிக்கும்  போது நடுவில் நவீன வாகனங்களாக இந்தக்கார்கள்  அன்று  வலம் வந்தன . இன்று யாழ்ப்பான போதனா வைத்திய சாலைக்கு  முன்பாக நோயாளிக்ளை ஏற்றி இறக்கும் சவாரி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் டக்ஸிசங்கம் இருந்த போது நுற்றுஜம்பதிற்கு மேற்பட்ட கார்கள் சவாரியில் ஈடுபட்டன. பின்னர் ஆட்டோக்கள் லீசிங் மூலம் வழங்கப்படுகின்றமையும் அதன் பாவனை அதிகரிப்பும் கார்களின் எண்ணிக்கை குறைவடைந்து சென்றன.  இன்று டக்ஸி சங்கத்தில் 22 பேர் உறுப்பினராக உள்ளனர். 9 பேர்  நிர்வாக உறுப்பினராக உள்ளனர். இன்று பதினைந்து கார்களே சவாரியில் ஈடுபட்டு வருகின்றன.

.டக்ஸி சங்கத்திற்கு என தனியான ஒரு கட்டடத் தொகுதி இல்லை முன்பு மாநகர சபையினால் கட்டடத்தொகுதி வழங்கப்பட்டது அது பின்னர் மீளப்பெறப்பட்டு விட்டது. ஒரு கோவில் முன்றலிலே நாம் ஒன்று கூடி கலந்துரையாடி வந்தோம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அதுவும் சாத்தியமற்று போய்விட்டது. இன்று வீதியோரங்களிலும் கார்தரிப்பிடங்களிலும் ஒன்று கூடுகின்றோம் கார் சாரதிகளுக்கான சட்ட திட்டங்கள் இடுவது விதிமுறைகளை விதிப்பது. சட்டதிட்டங்களைமீறுவோருக்கான தண்டனைகள் வழங்குவது போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து தயாரிப்பான மானிஸ் மைனர் வகையை சேர்ந்த
காரினை ஜம்பதாயிரம் ரூபாவிற்கு வாங்கினேன். இன்று இரண்டரை இலட்சத்திற்கு கேட்கிறார்கள் ஆனால் நான் விற்பதாக இல்லை. இக்கார்கள் பாவனை தரம் கூடியதாக உள்ளது. யாழ்ப்பான  குண்றும் குழியுமான வீதிக்கு இவ்வாறான கார்களே தரம் கூடியதாக உள்ளன.

சவாரி சில நாட்களில்  கிடைப்பதில்லை. மகப்பேற்று பெண்கள் நோயாளிகளே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். என்றார் வட்டுக்கோட்டையை சேர்ந்த கணகரட்னம்.

ஆட்டோக்கள் புதியரக் கார்கள் மோட்டார் சைக்கிள்கள் யாழ் மக்களின் பாவனையாக உள்ளன. இதனால் பழமை வாய்ந்த கார்களை கௌரவக்குறைச்சலைாக  பார்க்கின்றனர்.

இவர்களுக்கு சவாரி கிடைப்பதே மிகக் குறைவு. அப்படி கிடைக்கும் போதும் அதிக பணம் வாங்குவதில்லை. ஆட்டோ சவாரிக்கு  ஏற்றபடியே வாங்குகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் பாவனைக்கு அம்புலன்ஸ்  வண்டிகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளமையால் சவார குறைவடைந்துள்ளது.
திருமண வைபவங்கள் விஷேட தினங்களுக்கு இந்த கார்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று ஆடம்பரத்திற்காகவும் சொகுசுக்காகவும்  புதிய ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுளாப்பயனிகள்  புதிய ரக கார்களை விட பழமை வாய்நத கார்களையே தேடி வருகின்றனர். இந்த கார்கள் இன்னும் ஜம்பது வருடங்கள் ஓட முடியும்.  என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஒரு மணித்தியாளத்திற்கு 250 மைல் வேகத்தில் பயனம் செய்யக்கூடிவை.
அந்த காலத்தில் இந்தக்கார்கள் ஒருவரின் கௌரவச்சின்னமாக இருந்தது. அதிகாரிகளும் ஆளுனர்களும் பணம் படைத்தவர்களும் மட்டுமே பயணித்தனர்.  அப்போது வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பார்கள். இன்றும் இம் பழமை வாய்ந்த கார்களை வாய்  பிளந்து வேடிக்கை பார்க்கின்றனர்......
இதில் பயணிப்பதை கௌரவக்குறைவாகக் கூட  பலர் நினைக்கின்றனர். 
ஆயினும் பல மில்லியன் பெறுமதியான புதிய ரகக் கார்கள் இருந்தாலும் யாழ்ப்பாணம் வரும் சுற்றுளாப்பயனிகளை அதிகம் கவர்வன இந்த வகைக்யாழ் நகரில் வலம் வரும் அந்த கார்களே....... பழமையில் பெருமை தெரிந்தவர்கள் அவர்களே..............
           abimanju


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls