Pages

பாதுகாக்கப்பட வேண்டிய யாழின் தனித்துவம் மிக்க பொக்கிஷம்

மக்கள் மனதை கவரக்கூடியவை கலை வடிவங்கள். இந்த கலை வடிவங்கள் சமூகத்திலிருந்து  தோன்றி சமூகத்திலேயே நிலைத்து நிற்பன.
சமூகத்தின் நிஜ விம்பத்தை பிரதிபலிப்பதாக அன்று கூத்துக்கள் காணப்பட்டன. அன்றாடம் வேலைப்பளுவை தாங்கிய மக்களுக்கு உற்சாகத்தைத் தூண்டி உள்ளத்தில் புதையுண்டு கிடக்கும் வேட்கைகளுக்கு விடுதலை கொடுத்து அன்பையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்கும் பண்பைக் கொண்டவை கூத்துக் கலைகள். கிராமம் கிராமமாக அரங்கேற்றப்பட்ட கூத்துக்கலை கொஞ்சம் கொஞ்சமாக  மறைந்து செல்லும் நிலை தோண்றியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்ல் பாரம்பரிய கூத்தாகவும் யாழ்ப்பாண தனித்துவம் மிக்க கூத்தாகவும் விளங்கிய காத்தவராஜன் சிந்து நடைக் கூத்துக்கலை ஆற்றுகை இன்றி அருகிச் செல்கின்றது.

யாழ்பானத்தில் இனுவில்  துன்னாலை காங்கேசன்துறை வடமராட்சி போன்ற கரையோரப்பிரதேசங்களில் பிரபலமாக இக்கலை ஆடப்பட்டு வந்ததது.
முத்துமாரி அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய கூத்தாகும் ஊர்த்திருவிழாக்களின் போது இரவிரவாக இக்கூத்து ஆடப்பட்டு வந்த போதும் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் கூத்து புத்தாக்கத்தின் மூலம் மூன்று மனித்தியாளங்களாக குறைக்கப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டு வந்தது.

இக்கூத்தின் பாத்திரம் ஏற்று ஆடுபவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆற்றுகையை மேற்கொண்டனர். இக் கூத்தினை பழக்கும் அன்னாவிமாரின் மறைவுக்கு பின்னர் கூத்துகள் செயலிழக்க ஆரம்பித்தன. பாத்திரம் ஏற்று நடித்தவர்களின் இடமாற்றங்களும் சந்;ததி சந்ததியாக பாத்திரம் ஏற்று நடிக்காமை போன்ற காரனிகளாலும் கூத்துகள் ஆற்றுகை இன்றி உள்ளன. இக் கூத்தின் ஆற்றுகைக்கு அதிகளவான பணம் செலவிடப்படுவதும் அதன் பொறுப்பினை ஏற்க யாருமில்லாத நிலையும் காணப்படுகின்றது. தொழில்நூட்ப வசதிகளும் தொலைக்காட்சி வருகையின் பின்னர் கூத்தின் மீது மக்கள் நாட்டம் குறைவடைந்து வருகின்றது.

பாடசாலைகளின் கூத்து போட்டிகள் நடாத்தப்பட்டு கூத்திற்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அதனை கட்டிக்காக்க முடியாமல் தடுமாறும் நிலையே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கே தனித்துவம் மிக்க கூத்தாக காத்தவராஜன் சிந்து நடைக்கூத்து காணப்படுகின்ற போது அதனை பாதுகாக்கபடவேண்டிய சொத்தாகும்.
abimanju

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls