இடப்பெயர்வுகள் படுகொலைகள் இழப்புக்கள் ஒன்றும் தமிழ் மக்களுக்கு புதியவை இல்லை. அவர்களது வாழ்வியலில் ஒரு அங்கமானவை. எப்போதும் எதிர்பார்த்துக் காதிதிருப்பவை. இதன் மற்றொரு பதிவு தான் பச்சிலைப்பள்ளி மக்களின் அவலம். 2000.03.26 நள்ளிரவு பச்சிளைப்பள்ளி; துப்பாக்கி வேட்டுச்சத்தங்களால் அதிர்ந்தது. எறிகனையின் சிதறல்கள் தலைக்கு மேலே சீறிக்கொண்டு சென்றன. எங்கும் பரபரப்பு. எங்கும் அவலக்குரல். எங்கு ஓடுவது என்று தெரியாமல் கைகளில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு கால்போன போக்கில் நடந்த மக்களுக்கு தஞ்சமாக சாவகச்சேரி கிடைத்தது.
800 மேற்பட்ட குடும்பங்கள் நடைபயனமாய் தமது சொந்த மண்ணைவிட்டு சென்றனர். நீண்ட கால இடப்பெயர் வாழ்வு அம்மக்களது பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது.
பச்சிலைப் பள்ளிப்பகுதியில் 800மேற்ப்பட்ட குடியிருப்புக்கள் முன்னர் இருந்தன. ஆனால் இன்று?
எந்தப்பதிகளிலும் ஒரு கொட்டில்கூட இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை. இந்த நிலையிலும் தமது காணியில் மீண்டும் குடியமர ஆவலாய் இருக்கும் பச்சிலைப்பள்ளி மக்களுக்கு தமது மீள்குடியமர்வு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கால் நூற்றாண்டு முயற்சிகளின் பலனாக இப்போது வலிவடக்கில் மெல்ல மெல்ல மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய வாய்ப்பு பச்சிளைப்பள்ளி மக்களுக்கு கிடைக்கவில்லை
பாதுகாப்பு தேடி ஓடமுடியாமல் ஓரிடத்தில் இரவு முழுவதும் உயிரைக்கையில் பிடித்தபடி தங்கியிருந்தனர். அருகிலுள்ள ஆலயங்களில் தஞ்மடைந்தனர். இந்த மக்கள் தமது சொந்தக்குடியிருப்புக்களை இழந்து பதினொருவருடங்களுக்கு மேலாகியும் அவற்றின் தாக்கம் இன்றும் பல குடுப்பங்களின் மனதிலிருந்து மறையவில்லை.
இங்கிருந்து இடம்பெயர்ந்;த மக்கள் இன்றுவரை வாடகை வீடுகளிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடம் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களால் மீள்குடியமர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மிக விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. வாக்குறுதி கொடுக்கப்பட்டு நீண்ட காலங்கள் ஆகியும் இதுவரை மீளக்குடியமர்வுக்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எதிர் வரும் டிசெம்பர் மாதத்துக்குள் நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அனைத்து குடியிருப்பாளர்களும் மீள்குடியமர்த்தப்படுவர் என அரசு அறிவித்துள்ளது. இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது இன்னும் சில மாதங்களில் புரிந்துவிடும்
யுத்தம் முடிவடைந்து நீண்ட காலமாகியும் பச்சிலைப்பள்ளி பிரதேசம் இன்றும் போர்க்களம் போன்றே காணப்படுகிறது. இவ்விடத்தில் இருமருங்கும் பற்றைகளாலும் செடிகளாலும் மூடப்பட்டு கிடக்கின்றது. இவ்வழியாகவே மக்கள் போக்குவரத்து செய்கின்றனர.; பச்சிலைப்பள்ளி மேற்குப்பிரதேசத்தை சேர்ந்த 800மேற்பட்ட குடுப்பங்களில் 90 குடும்பங்கள் பிரதேசத்துக்கு வெளியே வசித்து வருகின்றனர். தமது மீள் குடியமர்வை உரிய தரப்பினருக்கு வலியுறுத்தும் நோக்குடன் பச்சிளைப்பள்ளி மேற்குப்பிரதேச மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பினரும் நீ;ண்ட காலமாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அழுத்தங்களை கொடுத்தனர். ஆனாலும் எதிவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை
abimanju
0 comments:
Post a Comment