வானமே கூரை எனக்கொண்டு தம் இரவுப் பொழுதை கழிக்கின்றனர் இறைவனின் குழந்தைகள் . அலையின் ஓசைகளில் வாகன இசைச்சலில் தூங்கிப் பழக்கப்பட்டு விட்டனர். எத்தனை பேருக்கு வாழ்வழிக்கின்றது இந்த மெரினா கடற்கரை சாலை என எண்ணத் தோண்றுகின்றது. காலையில் தம் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீடு போலல வந்து சேர்கின்றனர். .சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது மெரினா கடற்கரை. இதன் நீளம் 12 கிலோ மீட்டர் ஆகும். இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று மக்களால் பரவலாகக் கூறப்பட்டாலும் இதே போன்று நீளமான கடற்கரைகள் பல உள்ளன. சென்னைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கும் இடமாக திகழ்கிறது இந்த மெரினா கடற்கரை.
இந்த கடற்கரை தண்ணீரிக்கு பிரபலமோ இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம். தேங்காய் சுண்டல் ஏலக்காய் டீ பஜ்ஜி பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம். என்னதான் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் இன்றுவரை குளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இக் கடற்கரையைக் காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். துறைமுகத்திலிருந்து சாந்தோம் வரை விரிந்து பரந்துள்ள இக்கடற்கரையை 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயேர் அழகுற வடிவமைத்தனர். இப்பெருமை ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரையே சேரும் இந்த மெரினா கடற்கரையு|டாக நடந்துவந்த போது நான் கண்ட காட்சிகள் தான் இவை எத்தனை அறிஞ்ஞர்களும் பெரியார்களின் சிலைகளும் வீதியை அலங்கரித்து நிற்கின்றன. சாந்தோம் வரும் வழி முழுவதும் கடற்கரைகோரமாய் போர்த்திய படி படுத்துறங்கும் ஒரு கூட்டம் அந்த கடற்கரையில் இரவு வேளையிலும் உடற்பயிற்சிக்காய் இவர்களை தாண்டி செல்லும் வயதான பெருசுகள் கூட்டம். இதனை விட கடற்கரையில் விளையாடும் சிறுவர்கள் வரும் உல்லாசப்பயனிகளுக்கு சுண்டல் விற்கும் சிறுவர்கள் வயயதாணவர்கள் என எப்போதும் கல கல என் நிறைந்திருக்கும் இந்த கடற்கரை இவர்கள் ;யாரு ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறார்கள் என என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டபடியே நடந்து சென்றேன். அப்போது ஒரு பெண் மல்லிப்பு} விற்றபடி வந்தாள் அப்போது தான் கேள்விகளுக்கு விடை கேட்க ஆரம்பித்தேன்
வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் வாழவேண்டும் என்று வந்தவர்களும் ஊரை விட்டு ஓடி வந்தவர்களும் தான்மா அதிகம் அதை விட போதை பொருளுக்கு அடிமையானவர்கள் ஜெயிலுக்கு சென்று திரும்பியவரகள் வீட்டிலிருந்து துரத்திவிடப்பட்டவர்கள் என எல்லோரும் இங்க தான்மா இருக்காங்க பகல்ல வேலைக்கு போயிட்டு இரவில வநது படுத்திருப்பாங்க என்றார். இதனை கேட்ட படியே நாம் செல்லவேண்டிய இடத்திறந்கு சென்று விட்டோம் அப்போது கூட எங்க நாடு தான் நினைவுக்கு வந்தது வீதியில் படுப்பவர் என்று யாரும் இல்லை அன்று முழுவதும் இதே என் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. எங்க நாட்டில இப்பிடி ஊரை விட்டு ஊட மாட்டாங்க ஓடினால் அந்த குடும்பம் படும் பாடு தேடி இன்று வரை காணமல் போனோரை தேடும் உறவுகள் உறவுகளை பிரிந்து இன்றும் புலம்பெயர்நாடுகளில் தவிக்கும் இரத்த சொந்தங்கள் என் கண்முன்னே வந்த போயின
மறுநாள் காலை ஆறு மணிக்கே நாம் எழுந்து விட்டோம் உடற்பயிற்சிக்காய் மெரினா கடற்கரைக்கே செல்ல வேண்டியிருந்தது. என்நன்பர் கூட்டம் சென்றுவிட்டது எங்க ரூம் தான் எப்பவும் லேட் சரி வெளிக்கிட்டு வெளிய வந்தா யாருமே இல்ல எல்லாரும் போயிட்டாங்க வழியும் தெரியாமல் நின்னோம் சரி சாந்தோம் சேச் வழியா போகலாம் என்று ஒரு ஒழுங்கை வழியே போனோம் அங்க ஒரு நாற்றம் அது ஒரு சேரிப்புறம் மாதிரி இருந்தது தகர்ஙகளும் முழுமைபெறாத குடிசைவீடுகளும் என சேரி புற அமைப்பு தெரிந்தது அதில் ஒருவரிடம் கேட்டோம் மெரினாபீச்சுக்கு எப்படி போறது என்டு அவர்தான் வழி காட்டினார்
அந்த வழியே நடந்து போனோம். அப்போது மணல் வழியே சீட்டு ஆடி கட்டுகளாய் கொட்டிக்கிடந்தது.
உடற்பயிற்சி ஆரம்பமாகியது அப்போது என் சிந்தனையை கடற்கரை நிகழ்வுகள் சிதைத்துக்கொண்டிருந்தன போர்திய சீற்றியை சுற்றியபடி பெண்களும் மணலில் மேலே மெத்தையமைத்து உலகம் மறந்து உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களும் என் கண்களை ஒருநிலையிலி்ல் இருந்து திரும்பிப் பார்க்க வைத்தது. கடற்கரையில் மலம் கழித்தலும் முகம் கழுவுவதும் நடைபெற்றன.
ஆடலுக்கும் பாடலுக்கும் ஆசியர்கள் இன்றி இந்த கடற்கரையில் தான் இளவட்டத்தினர் நடனம் பயின்று கொண்டிருந்தனர். அலைவரும் வேகத்திற்கு தாளகட்டெடுத்து நடனம் பயின்றது ஆச்சரியத்தை ஊட்டியது.நடனத்திற்கு ஆசிரியர் தேவையில்லை முயற்சி இருந்தால் எதுவும் நமக்கு ஆயுதமே என்பதை எடுத்து காட்டியது. இந்த கடற்கரையை பார்த்து ஆசிரியர் எமக்கு சில விடயங்களை கூறினார். கண்களை மூடி கூறியவற்றை கேட்டோம்.அலைபோல பிரச்சினைகள் வரும் ஆனால் அது நிதந்தரமில்லை. அலைக்கெதிராக நீச்சல் போட வேண்டும்.. பிரச்சினைகளை கண்டு சோர்த்து போவதல்ல வாழ்க்கை. அது தான் எம் பலம்மிக்க சக்தியை அடையாளம் காட்டும் ஆயுதம் என்றார். மெரினாவின் நினைவுகள் எம் கண“களை மூடவிடாது தடுத்தது. பிரச்சினைகள் என்ற சொல்லும் இந்த மக்களின் வாழ்க்கையும் எப்படி ஒத்துப்போகின்றது என்பதையே நினைத்துக் கொண்டிருந்தேன். வீட்டில் தந்தை பிரச்சினை படிப்பதற்கு பணமில்லை வாழ்வதற்கு வழி தெரியாதவர்கள் தங்க வீடில்லாதவர்கள் முயற்சி இருந்தும் செயல்படுத்த முடியாதவர்கள் என ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகளோடு மெரினா கடற்கரைதான் தஞ்சம் என்று நம்பி வாழ்பவர்களின் பிரச்சினைகள் கண்முன்னே வந்தன.
சின்ன சின்ன பிரச்சினைகளை கண்டு சோர்ந்து போகும் எங்களுக்கு புத்துயிர் தந்ததாக அமைந்தது. அலையென பிரச்சினைகள் வந்தாலும் நமக்கான இலக்கு மட்டும் அசைவதே இல்லை அதே போல பிரச்சினைகள் வந்தாலும் எம் நம்பிக்கையும் அசையாது இருக்க வேண்டும் இதை கேட்டு கொண்டே கடற் கரை மீது ஓடி வந்த நண்டை ரசித்தோம். அது மணலை நோக்கி வருவதும் அலை அடிப்பது அந்த நண்டிற்கு தெரியாதா? தெரிந்தும் ஏன் இந்த நண்டு தண்ணிக்குள் தீக்குளிக்கின்றது.
அது தான் வாழ்ககை பிரச்சினை என்று தெரிந்து ஒதுங்கி விடாது அலையோடு எதிர் நீச்சல் போடும் நண்டை போல நான் இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன் மெரினா கடற்கரையே வீடு .நமக்கென்று யாரும் இல்லை ஆனால் எம்மை அரவனைக்க இந்த கடற்கரை இருக்கின்றது .. நமக்கான வாழ்க்கை என்று தினம் தினம் பிரச்சினைகளும் போராட்டங்களும் வந்து போகின்றன ஆனால் சலைக்கவே இல்லை இந்த மெரினா கடற்கரை வாசிகள் ...தினம் தினம் புதிய முகங்கள் ஆதரவற்ற உறவுகள் எல்லோரும் வாருங்கள் நான் இருக்கின்றேன் என்று அரவனைக்கும் மெரினா கடற்கரை. தாகம் தீராத தண்ணீரை போல தாயின் மடியில் எத்தனை ஜீவன்களும் தாகம் தீர்க்கலாம்....
0 comments:
Post a Comment