Pages

யாழில் வீதிநாடகம் மீண்டும் அரங்கேற்றம்.

 கால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில் திருவிழாக்களும் சடங்கு முறைகளும் வழமை தவறாது பேணப்பட்டு வருகின்றன. “மானாட மயிலாட”, “சுப்பர் சிங்கர்”; போன்ற தொலைக்காட்சித் தொடர்  நிகழ்வுகளும்; ஒவ்வொருவரின் இரசனைக்கு தீனி போடுவதாய்  அமைந்து விடுகின்றது.
ஊர்த்; திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்கள் கூத்துக்கள் வில்லுப்பாட்டுக்கள் விடயங்களை அலசும் சுவாரஸ்யமான பட்டிமன்றங்கள் மனித மனங்களில் இடம் பிடித்துவிடுகின்றன தனித்துவம் மிக்க கூத்துக்களும் காலமாற்றத்தினால் காணாமல் போய்விட்டன. சமுதாயத்தின் மாற்றமும், தேவையும் அதிகரித்து கூத்து ஆடியவர்கள் தொடர்ந்து ஆட முடியாமல் ஒரு நழுவல் நிலையை ஏற்படுத்தி விட்டன. மக்களோடு நேரடியாக உறவாடும் கலையாக நாடகங்கள் அமைகின்றன இன்றைய நவீன சினிமா உலகம் தோன்ற முன்னர் மக்களின் பொழுது போக்கு விடயமாக நாடகங்கள் செயற்பட்டன. அதனை விட சம கால அரசியல் விடயங்கள் சமூக விடயங்களை எடுத்துக் கூறுவதற்கு நாடகத்தை ஒரு மூலமாக பயன்படுத்தினர்.
தொலைக்காட்சி, இணையத்தின் வருகை அதிகரித்துள்ள போதும் நாடகத்திற்கு இருக்கின்ற மதிப்பு குறைவதே இல்லை. ஏதோ ஒரு விடயத்தை சொல்லுகி;ன்றதாலும் இளவட்டத்தினரின் மனதில் அவை இடம்பிடித்து நிற்கின்றன.  தொலைக்காட்சி தொடர,; வேலைப்பளு, இணையம் போன்றன குறுகிய வட்டத்துக்குள் நிற்கின்ற இன்றைய தலைமுறைக்கு  நாடகங்கள் கேளிக்கைகள் போன்றன விடுதலையை கொடுக்கின்றன.   
1980 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தழிழர்களின் அரசியல் பிரச்சினைகளையும் சமூகப்பிரச்சினைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பவையாக வீதி நாடகங்கள் செயற்பட்டன. தழிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டன தழிழர்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்பதையும் இந்த நாடகங்கள் பிரதான கருப்பொருளாக கொண்டிருந்தன.
மக்கள் கூடுகின்ற ஒரு பொது இடத்தில் ஆற்றுகை இடம்பெறும.; ஆலயமுன்றல் சந்தைப்பகுதி பஸ் தரிப்பிடம் போன்ற இடங்களில் நாடகங்கள் அரங்கேறும.; இன்றைய கால நிகழ்வுகளை போல ஒரு வாரத்திற்கு முன்னரே பத்திரிகையில் போடப்பட்டு ஆற்றுகை செய்யப்படுவதில்லை. இன்று ஆலய முன்றலில் இரவு பத்துமணிக்கு நாடகம் இடம்பெறும். அனைவரும் ஒன்றுகூடுங்கள் என்று ஒரு அறிவிப்பு வழங்கப்படும.; இன்று விஜய் படம் ரீலிஸ் என்றால் எப்படி கூட்டம் கூடுமோ அப்படி தான் அன்றைய காலத்தில் மக்கள் நிறைந்திருப்பார்கள்;. பாட்டன் பாட்டி தொடக்கம் குஞ்சு குருமன் வரை எல்லாம் இந்த கூட்டத்தில் இருக்கும். அரங்கு என்று ஒன்று இருக்காது. வாகனத்தில் சில பொருட்களை காட்சிப்படுத்தி நடுவில் நின்று நடிப்பார்கள.; நடிகர்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலையில் துண்டு கட்டியிருப்பார்கள். பார்வையாளரை தன்வசப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இளசுகள் எல்லாம் மரங்களின் மேல் ஏறி நின்று  நாடகத்தை பார்ப்பார்கள். எல்லோர் மனதிலும் பதியக்கூடிய வகையில் எளிமையாக சொல் நடையில் சிறப்பாக கருத்துக்களை கூறுவார்கள். இன்று பாடல்கலை முனுமுனுத்து செல்வதைப்போல இந்த நாடக வசனங்கள் எல்லோர் வாயிலும் அசைபோடும்.  நடிகர்கள் மிக அவதானமாக நடிப்பை வெளிப்படுத்துவார்கள். பார்வையாளர்கள் மிக நெருக்கமாக நிற்பதால் அவர்கள் விடும் சிறிய தவறும் தெளிவாகத் தெரியும். உணர்வுகளும் அசைவுகளும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
1989 காலப்பகுதியிலேயே விடுதலைப்புலிகள் தம் கொள்கைகளையும் கருத்துக்களையும் பரப்புவதற்கு வீதி நாடகங்களை அதிகம் பயன்படுத்தினார்கள். இந்த காலத்திலேயே இந் நாடகம் அதிகம் வளர்ச்சி கண்டது. இரவுப் பொழுதுகளில் ஊர் முன்றலில் கோயில் வீதிகளில் அரங்கேற்றுவார்கள். நாடகத்தை பார்த்த சில இளவட்டத்தினர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். தழிழர்களின் பிரச்சினைகளும் கொடுமைகளும் அதிகளவு பேசபப்பட்டது. இந்த நாடகத்தில் பேசப்பட்ட பாடல் வரிகள் மக்கள் மனதில் நின்று நிலைப்பவையாக இருந்தன. தொலைக்காட்சிகளோ வேறு பொழுபோக்கு விடயங்களோ இல்லாத காரத்தினால் மக்கள் எப்போது நாடகம் போடுவார்கள் எங்கு போடுவார்கள் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். அரசியலின் உன்மைத்தன்மையும் பிரச்சினைகளும் பாமர மக்கள் மத்தியில் அதிகளவு சென்றடையவில்லை. இதன் தன்மையை விளங்கி வீதி நாடகம் மக்கள் கூடுகின்ற இடங்களுக்கு சென்றது. அரசியலின் உண்;மைத்தன்மையையும் சமகாலப்பிரச்சினைகளையும் எடுத்துக்கூறியது.
  மாயமான,; கசிப்பு, விடுதலைக்காளி போன்ற வீதி  நாடகங்கள் சம காலப்பிரச்சினைகளை எடுத்துக்கூறின. இந்த நாடகங்கள் உணர்வுகளை தூண்டி சமூக மாற்றத்தை ஏற்படுத்தின.  இதனால் இந் நாடகங்கள ஈழத்தில் பிரபல்யம்   பெற்றன. வீறு கொண்டு எழுந்து வெற்றி கண்ட வீதி நாடகங்கள்; 2000 காலப் பகுதியில் குறைவடையத் தொடங்கின. பின் யாருக்கும் தெரியாத ஒரு கலைவடிவமாக சென்று விட்டது. பிரச்சினைகளையும் சமகால அரசியல் விடயங்களையும் பாமர மக்களிற்கு எடுத்து செல்லும் சிறந்த ஒரு ஊடகம் இது.
காலமாற்றமும் காலத்தின் கட்டாயமும் எமது கலைகள் அழிவடைந்து வருகின்றது.
தற்போது யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சமூகப்பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கும் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன அந்த வகையில் இந்த வீதி நாடகங்கள் தம் பணியை செய்கின்றன. பிரச்சினைக்குரிய காரணத்தினையும் விளைவுகளையும் எடுத்துக் கூறுகின்றன.
சமுதாயத்தின் பிரச்சினைகளும் அரசியலின் உன்மைத்தன்மையும் தற்காலத்தில் எடுத்து கூறப்படவேண்டிய கட்டாயம் நிலவுகின்றது. பிரச்சினைக்கான காரணத்தையும் அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளையும் மக்களிற்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
காலத்தின் கட்டாயம் வீதி நாடகங்கள் சில காலம் மறைந்து போயிருந்தாலும் தற்போது காலத்தின் தேவை கருதி இந் நாடகங்கள் துளிர் விடத் தொடங்கியுள்ளது.
சமகாலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் அரசியல் நிலவரங்களின் உன்மைத்தன்மைகள் பாமர மக்களை சென்றடைய வேண்டும். பிரச்சினைகளுக்குரிய காரணங்கள் தெளிவாக சென்றடைந்தால் மட்டுமே பிரச்சினைகளிலிருந்து வெளிவரமுடியும்.
    
அபிமன்யூ.எஸ்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls