Pages

22 வருடங்களாக கொழும்பில் அடிப்படை வசதி இன்றி வாழும் மட்டக்குழி அகதி முகாம் மக்கள்

மழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் நிரம்பி வழிகின்ற மலசலகூடம், கதவுகளின்றிய கழிப்பறைகளையும் திறந்த வெளியில் குளியறை என 22 வருடங்களாக இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். காக்கைதீவு முஹஜறீன் முகாம் மக்கள். ஓடித்திரியும் சிறுவர் பட்டாளம் உக்கிய தகரங்களால் வேயப்பட்ட கூரைககள், நான்கு அடி உயரமுள்ள சின்ன சின்ன குடீசை வீடுகள், வீPட்டு வாசலோடு தொடரும் பக்கத்து வீடு... என்று கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த இடம் தான் இந்த முகாம். கொழும்பு நகரிலிருந்து சற்று உட்புறமாக அமைந்ததே காக்கைதீவு எனும் கடலை அண்டிய பகுதியில் தான் அமைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் அகதிகளாக இங்கு குடியேறினர். இந்த அகதிமுகாம் நிலப்பரப்பு ஒரு சதுப்பு நிலமாகும். பாம்புகளும் பற்றைகளுமாய் காணப்பட்ட பிரதேசம் பாடசாலை கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு நிலத்தின் தன்மை சதுப்பு நிலமாகிய காரணத்தினர் பாடசாலை கட்டும் முயற்சி கைவிடப்பட்டு புறம்போக்கு நிலமானது.

அந்நிலத்திலேயே இம்மக்கள் தமக்கான தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர் ஆனால் அதுவே அவர்களிற்கு நிரந்த வீடாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஓலைக்குடிசைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளை அரச சார்பற்ற நிறுவனங்களில் உதவிகளுடன் தகரங்களால் அமைத்தனர். ஆரம்பத்தில் 200 குடும்பங்கள் வசித்த போதும் தற்போது 90 குடும்பங்கள் வாழ்கின்றனர். சிறிய நிலம்பரப்பில் கூட்டுக்குடும்பமாக வாழும் இவர்களின் ஒற்றுமை பாராட்டப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் கால் நீட்டித்தூங்க முடியாது விறகுக்கட்டைகள் அடுக்கி வைப்பது போல் இரவுப்பொருதைக்கழிக்கும் இவர்களின் நிலை வேதனைக்குரியதே.


வீடுகள் மிக நெருக்கமாகவும் சிறிதாகவும் காணப்படுவதால் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. மழைகாலம் தான் இவர்களுக்கு முக்கிய எதிரி.. நிரம்பி வழியும் மலசல கூடம், எந்நேரமும் ஊறிக்கொண்டிருக்கும் நிலம். வரும் நீரை தடுக்க முடியாது கீழே தள்ளும் உக்கிய தகரங்கள், மூக்கின் மேல தானாக உயரும் கைகள் என மழைகாலத்தின் காட்சிகளாக அமைகின்றன.. 90 குடும்பங்கள் 8 கழிப்பறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் மோசமானது.  ஆண்களுக்கு 4 கழிப்பறைகளும் பெண்களுக்கு 4 கழிப்பறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரம் என்றால் கூட காத்திருந்து கடமை முடிக்கும் துர்ப்பாக்கிய நிலை. கழிப்பறைகளுக்கு கதவுகள் இல்லை முறையாக சுத்தம் செய்யப்படுவதும் இல்லை. கதவுகள் இன்றிய கழிப்பறைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவில் பெண்பிள்ளைகள் தனியாக கழிப்பறைக்குள் செல்லமுடியாதுள்ளது.  அதற்கு ஆண்பிள்ளைகளின் நடவடிக்கையே காரணம்.

வெட்டவெளியில் அமைந்த ஒரே ஒரு குளியலறை. நேர சூசிப்படி குளிக்கும் நடைமுறை. குhலை 6 மணிமுதல் 11 மணிவரை ஆண்களும் 11 மணிமுதல் இரவு 8.00 மணி வரை பெண்களும் குளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர தேவையாக இருந்தாலும் முறை மாறி குளிக்க முடியாது.

தாய் பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று ஒரு சிறிய குடிசைக்குள் கூட்டுக்குடும்பமாக வாழ்வதாலும் நெருக்கமாக குடிசைகள் அமைந்திருப்பதாலும் மறைவான குளியறைகளோ கழிப்பறைகளோ இல்லாததால் சமுக சீர்கெடு மலிந்து காணப்படுகின்றது. 
http://www.facebook.com/pages/Abis-photography/543407969021076?ref=ts&fref=tshttp://www.facebook.com/photo.php?fbid=551732508188622&set=a.543878522307354.140482.543407969021076&type=1&theater
சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் ஆண்கள் சம்பாதிக்க தொடங்கி விட்ட மன தைரியத்தில் மனம் போன போக்கில் வாழப்பழகி விட்டனர்.  போதைவஸ்து குடி பழக்கம் என்று தம்மை அடிமையாக்கி விட்டனர்.

பெண் அடிமைத்தனத்திலிருந்து எமது நாடு எபபோதோ மீண்டு வந்த போதும் இங்கு பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காத மதிக்கவில்லை.. பெண்பிள்ளைகள் வெளியில் சென்று படிப்பதையோ தொழில் செய்தாலோ இச் சமுகம் வேறு கோணத்தில் திரிபுபடுத்திப்பேசுகின்றது. பேண்களுக்கு கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் அவர்கள் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் உலகம் அந்த முகாம் தான். சிறுவயதிலேயே திருமணம் செய்து குடுப்ப பொறுப்பை ஏற்கின்றனர்.  

இது குறித்து முகாம் உள்ள ஊஃ010 கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகர் ஆ.லு.ஆ. சிதிக் இது பற்றி கூறுகையில் 'இம் முகாம் பிரச்சனைகள், வாழ்வு நிலை பற்றி எவ்வித தகவலும் முறைப்பாடுகளும் வரவில்லை. இந்நிலையில் நான் என்ன செய்ய முடியும்? இப்பகுதி மக்களிற்கு சமூகத் தொடர்பாடல் போதாது வெளியுலகம் தெரியாது. புடிப்பறிவு குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் நான் ஒரு வகையிலும் உதவ முடியாது அவர்கள் என்னிடம் வரட்டும் வந்து முறையிடட்டும் பின்னர் பார்க்கலாம்' என பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.

ஆரோக்கியமான மனித வாழ்விற்கு சுகாதாரம் முக்கியமானம் ஆரோக்கியமான நாட்டிற்கு அடையாளம் மக்களின் சுகாதாரம் தான். அப்படி இருக்கும் Nபுhது எம் மக்கள் இவ்வாறான அருவருப்பான சூழலில் 22 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிந்து இத்தனை வருடங்களிற்கு பின்னும் கொழும்பு மாநகரத்தில் இப்படியான ஒரு அகதி முகாம் இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது. தற்போது முஸ்லிம் கலாசார சபையின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. இவர்களால்  ஏதும் நன்மை கிடைக்குமா? என முகாம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

'இப்பகுதிக்கு வரும் அரசியல் வாதிகள் எம்மை விளம்பரப்படுத்தி வெளி நாடுகளிடம் இருந்து பணவுதவி பெறுகின்றனர். இருப்பினும் அவை எம்;மை வந்தடைவதில்லை' என்பது இம்முகாம் மக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் நமக்கான அடிப்படை வசதிகளை ஏற்பத்தித் தருவார்கள் என்று 22 வருடங்களாக காத்திருக்கின்றனர். முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொள்ளும்  அரசியல் வாதிகள் இம் மக்களின் வாழ்வினையும் ஒரு தரம் கண்திறந்து பார்க்கவேண்டும். ஆவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

முஸ்லீம் சமூக ஆர்வலர்கள், புலம்பெயர்வாழ் முஸ்லீம் அமைப்புகள் இம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்பதற்கான வழிமுறைகளை செய்வேண்டிய பொறுப்பு உங்களுடையது. கலாச்சார சீர்கேடுகள் ஏற்பட அடிப்படை பிரச்சினை காரணமாக இருப்பதை கண்டுகொள்ளுங்கள். துpனம் தினம் தம் பிரச்சினை தீர்க்க யாராவது வருவார்கள் என்று 22 வருடங்களாக வாசல் நோக்கியுள்ள கண்களுக்கு யார் பதில் சொல்வார்கள்.. எப்போது அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls