கிராமப்புறங்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டாக இருந்த கபடி இன்று தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் விளையாடப்படும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த கபடி விளையாட்டு யாழ்ப்பாணத்து ஊர்களில் இளைஞர்களின் பொழுது போக்கு விளையாட்டாக இருந்தது. தற்போது கழகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் மாவட்ட மாகாண மட்டங்களை நோக்கி நகர்வடைந்து வருகின்றது.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்த கபடி கிராம மட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் கபடி ஆரம்பத்தை கணிப்பிட முடியாதுள்ளது.
ஆரம்ப காலங்களில் மாலை நேரங்களில் தோட்ட வெளிகளில் அரங்கேறும். இளவட்டத்தினர் ஒன்றுகூடி இரு கன்னையாக பிரித்து விளையாடுவார்கள். ஒரே ஊர் சொந்த பந்தம் என்பதால் போட்டி அடிபாடுகள் கிடையாது. தோட்ட வெளியில் நடக்கும் கபடியை பார்க்க ஊரே ஒன்று கூடும். இன்று கபடி என்றால் சண்டை ரவுடிகளின் விளையாட்டு, அபாயமானது என்ற ஒரு தவறான எண்ணம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.
பின்னர் கழகங்களின் வளர்ச்சி போட்டிமுறையை ஏற்படுத்தியது. இன்று பிரதேச மட்டத்தில் உள்ள கழகங்கள் தம் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி கபடியை ஆடுகின்றனர்.
நெடுந்தீவு, ஊர்காவற்துறை, பருத்தித்துறை, தெல்லிப்பழை, வேலனை, கரவெட்டி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் கபடி பிரபல்யம் பெற்றுள்ளது. வலைப்பந்து கிரிக்கெற் என்று மெதுவாக நகர்ந்த பெண்கள் இன்று கபடியிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். தெல்லிப்பழை பருத்தித்துறை, நெடுந்தீவு, உடுவில் போன்ற பிரதேசங்களில் பெண்கள் கபடி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கபடி விளையாட்டில் பங்கு பற்ற முடியும். ஏழு பேர் கொண்ட அணி களத்தில் இறங்கும் எதிரணியை வெற்றிகொள்வதற்காக பலத்துடன் மோதுவார்கள்.
யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்கள் பிரிவில் சென் தோமஸ் விளையாட்டுக்கழக அணியும் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை இளஞ்சுடர் விளையாட்டு கழக அணியும் முன்னிலை வகிக்கின்றது.
யாழ் மாவட்ட அணியினர் மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றுகின்ற போதும் அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது.
மணற்தரைகளில் விளையாடிப்பழகிய வீரர்களுக்கு காப்பெற் தரையில் விளையாடுவது சவால் நிறைந்த ஒன்று. யாழ்ப்பாணத்தில் காப்பெற் ஆடுகளம் இல்லை. போட்டிகளின் போது வெளிமாவட்டங்களில் காப்பெற் தரையில் விளையாட முடியாது தடுமாறுகின்றனர்.
தற்போது கபடி விளையாடும் வீரர்கள் முழு நேரப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை.. தமது வேலைகளை முடித்து விட்டு பொழுது போக்கு விளையாட்டாகவே கபடியை பார்க்கின்றனர். மருதங்கேணி பிரதேசத்தில் திருமணமானவர்களும் கபடி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரர்கள் தமது பலத்தினை பயன்படுத்தி உள்ளுர் போட்டிகளில் வெற்றிபெறுகின்ற போதும் வெளிமாவட்டங்களில் பலத்தை விட மூலையையே அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மாகாணப்போட்டிகள் சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது.
தற்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் கபடி பயிற்சிகள் வழங்கப்படுகின்றனர். பதினைந்து வயதினருக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை ஆரோக்கியமான விடயமும் வரவேற்கப்பட வேண்டியது. என யாழ் மாவட்ட கபடி பயிற்றுனர் முகுந்தன் தெரிவித்தார்.
தற்போது ஏனைய விளையாட்டுக்களை போல கபடியும் வளர்ச்சி கண்டு வருகின்றது. வடமராட்சி இளவாளை நெல்லியடி சாவகசசேரி போன்ற பிரதேச பாரசாலைகளில் கபடி விளையாடப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் கபடி விளையாட்டு வளர்ச்சி கண்டுள்ள போதும் அதனை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது. காப்பெற் தரை ஆடுகளத்தல்p வெறும் காலுடன் விளையாட முடியாது. கபடி போட்டியாளர்கள் பயன்படுத்தும் காலணிகள் விலையுயர்ந்தவை. ஒரு வீரருக்கான காலணிக்கு குறைந்தது 3500 ரூபா தேவைப்படுகின்றது. நிதிப் பற்றாக்குறையால் கபடி விளையாட்டினை வளர்த்தெடுக்க முடியாத சூழ் நிலை காணப்படுகின்றது. யாழ்மாவட்டத்தி;ல் கபடிக்கான போட்டி குறைவக காணப்படுகின்றது. இதனால் வீரர்கள் தம் திறைமையை வெளிப்படுத்தவும் பலப்பரீட்சையில் ஈடுபடவும் முடியாமல் இருக்கின்றது. போக்குவரத்துப் பிரச்சினை நிதிப் பற்றாக்குறை போன்றவற்றால் கபடியை வளர்தெடுப்பதில் சவால்களை எதிர்நோக்குகின்றனர். இத் தேவைகளை நிவர்த்தி செய்யுமிடத்து யாழ் மாவட்டத்தின் கபடியும் வளர்ச்சியடையும்
0 comments:
Post a Comment