Pages

யாழ்ப்பாணத்தில் மின் பாவனையாளர் தொகை சடுதியாக அதிகரிப்பு: தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல்

யாழ் மாவட்டத்தில் மின் பாவனையாளர் தொகை அதிகரித்து வருகின்ற போதும் 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பே இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனால் யாழ்குடா நாட்டில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகின்றது என யாழ் பிரதேச பொறியியலாளர் எஸ். ஞானகணேசன் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டு மக்களின் பயன்பாட்டுக்காக 15 மில்லியன் ரnவை மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. 1 லட்சத்து 11 ஆயிரம் சாதாரண பயனாளிகள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் பேர் புதிதாக இணைக்கப்படுகின்றனர். எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் மின் பாவனையாளர்களின் தேவைகளை சமாளிக்கும் வகையில் மின்கட்டமைப்புக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.



ஆனால் 1996 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பே இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனால் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகின்றது. டீசல் மூலமே மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் வெளியேறும் புகையால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதற்கு மாற்று நடவடிக்கையாக வவுனியாவிலிருந்து நீர் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2013ஆம் ஆண்டு இத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls