Pages

அவசரம் {ஈழத்து மண்வாசனை}

காதலிக்கின்றீர்களா ஓடிப்போய் திருமணம் செய்யவேண்டிய நிலை வருமா? பாருங்கள்
இந்திய திரைப்படங்களை பார்த்து பழகிய நம் ஈழத்தவர்களுக்கு தம்மாலும் திரைப்படங்களை தயாரிக்க முடியும் என களத்தில் இறங்கியுள்ளது நம் இளையர்சமுதாயம். தடுமாறிக் கொண்டிருக்கும் இளையர் சமுதாயத்தின் வாழ்ககையை பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. புது முகங்களின் அறிமுகம் ஜதார்த்ததுக்கு முரனாக அமைந்திருந்த போதும் வழமையாக பிரயோகிக்கின்ற மொழிநடையில் இத்திரைப்படம் அமைந்திருந்தது. அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் தவறாக அமைகின்றமையை எடுத்துக்காட்டுகின்றது.


நன்பர்களுடன் ஊர் சுற்றித்திரியும் இளையர் கூட்டம் பருவக்காய்ச்சலால் பெண்கள் பின் சுற்றித்திரிவதும் பிரச்சினை என்று வந்தவுடன் மச்சான் நாங்க இருக்கோம் நீ பயப்பிடாத என்று பக்கம் நின்று உசுப்பேத்தும் நண்பர் கூட்டம். பார்ப்பதற்கு ஆர்வத்தினை துண்டுகின்றது.  புதுமுககதாநாயகன் சிர்த்தாத் காதல் மன்னனாக வலம் வரும் காட்சிகள் பிரமாதம். கஜதீபனின் அயக்கத்தில்  கன்னித்திரைப்படமாக வெளிவந்துள்ளது.காதல் மயக்கத்தில் அவசரமாக எடுக்க்படும் முடிவுகள் நிம்மதியை சந்தோசங்களை சிரிப்புக்களை காணமுடியாத தோற்றுவிக்க முடியாத நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. கிளைமாக்ஸ் காட்சிகளை விரிவாக காட்டாவிட்டாலும் சொல்லவரும் விடயங்கள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.  
  அப்ராமனின் இசையமைப்பில் வெளிவந்திருந்தாலும் தென்னிந்திய திரப்பட பாடல்களும் இடம்பெற்றுள்ளது.
காதலினை வெளிப்படுத்துவதற்காக கதாநாயகன் துரத்துவதும் பின் கதாநாயகி காதலின் வெளிப்பாடாக பூவினை வழக்குவதும் காதல் கீதங்கள் மனதை மயக்குவதாக அமைந்திருந்த போதும் காதலுக்காக இந்த காலத்தில் பூ வழங்குவதெல்லாம் முரனாக அமைந்திருந்தது. கதாநாயகி யாழினி சிஙப்பாக தன் நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். போத்தல்கள் உடைவதும் வீட்டில் சண்டை நடப்பதுவுடன் திரைப்படம் முடிவடைகின்றது .AAA movies ஊக்குவிப்புடன் இத்திரைப்படம் வெளிவந்திருக்கின்றது.ஈழத்தில் இது போண்ற திரைப்படங்கள் வெளிவருவதற்கு இது ஓர் முன்னுதாரனமாகவும் காதலில் அவசரப்படும் உள்ளங்களுக்கு காதலிக்க காத்திருக்கும் உள்ளங்களுக்கும் இப்படம் சமர்ப்பணம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls