யாழ் பல்கலைகழக நூல் நிலையத்தை பயன்படுத்தும் மாணவர்களின் வரவு குறைவாகவே உள்ளன என யாழ் பல்கலைகழக நூலக பதவி நிலை உத்தியோகத்தர் சே.பத்மநாதன் தெரிவித்துள்ளனா.; இங்கு 175000 புத்தகங்கள் உள்ளன. 6635 பேர் நூலக அங்கத்தவராக உள்ளனர். ஆயினும் நூலகத்தை அதிகமாகப்பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது .
இந்நூலகத்தில் வருடந்தோறும் 20மில்லியன் ரூபா பணம் செலவு செய்யப்படுகின்றது . ஒவ்வொரு வருடமும் புதிய புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. ஆனாலும் பல புத்தகங்கள் மாணவர்களால் பாவிக்கப்படாமலே உள்ளது. ஆங்கிலமொழிப்புத்தகங்கள் மாணவர்கள் கைதொடாத புத்தகங்களும் உள்ளன.
இதற்கு பிரதான காரணமாக மொழிப்பிரச்சனை காணப்படுகின்றது. இவ்நூலகத்தில் விசேடஆவணங்களாக முதுநிலைப்பட்டப்படிப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகள்ää ஏடுகளää; விழாமலர்கள்ää இலங்கை சார்ந்த பருவ இதழின் சேகரிப்புää சிறு நூல்கள் bluebook எனப்படும் ஆங்கிலேயகால அரச விபரக்கொத்துக்கள்ää அரசதிணைக்களங்களின் வெளியீடுகள் போன்றவை இங்கு மாணவர்கள் வாசிப்புக்கு விடப்பட்டுள்ளது என அவர் தெரவித்தார்.
0 comments:
Post a Comment