அதனை விட கனக மனொகரனின் சட்டத்துறை யில் தழிழ் எவ்வாறு பயன்படுகின்றது என்பதனை கருத்துரை மூலம் அறிய முடிந்தது. இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் நிறுவணமான இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கருத்துறைகளும் செயற்பாடுகளும் விரிவான விளக்கங்களும் அனுபவங்களும் வழிகாட்டியாக அமைந்தன பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நோக்கங்கள் செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள கூடியதாக அமைந்தது. ஊடகவியளாளர்கள் எதிர் நோக்கும் சவல்கள் பிரச்சினைகள் தொடர்பாக்வும் அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. இலங்கையில் தழிழர்கள் உடகதுறையில்எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே சிங்களவர்களும் எதிர்நோக்குகின்றனர். என்பதனை அறியகூடியதாக இருந்தது.
கல்விஅமைச்சர் திசாநாயக்காவுடனான சந்திப்பு புதிய அனுபவத்தினை பெற்றுத்த. உயர்கல்வி திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கங்களை அளித்தார். புதிய தொழில்கல்விகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள் நிறுத்தப்படவுள்ளன இக் பட்டப்படிப்புககள் ஒழுங்கான முறையில் நடைபெறவில்லை. எனவும் தெரிவித்தார். பல்கலைக்கழக அபிவித்திக்காக அனுப்பப்படும் நிதி மீளவும் திருப்பி அனுப்பபடுகின்றது .எனவும் தெரிவித்தார்.
தெற்காசிய பெண்கள் அமைப்பு நடாத்திய கருத்தரங்கில் பங்குபற்றினோம் தெற்காசியபெண்கள் ஊடகதுறையின் பங்களிப்பு தெற்காசிய பெண்கள் ஊடகதுறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்து. சமுக கலாச்சாரம் அவர்களின் ஊடக பயனத்திற்கு தடைவிதிக்கின்றது. தற்காலத்தில் கணிசமான பெண்ள் ஊடகதுறையில் பிரவேசிக்கின்றனர். ;ஆயினும் பெண்கள் ஊடகதுறையில் நிலைத்து நிற்க முடியவில்லை. இதற்கானகாரணங்கள் இதனை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் புதிய அனுபவத்தினை பெற்று கொடுத்தது.
கொழும்பு நூதன சாலையில் நாம் முன்பு கற்ற விடயங்களை பார்வையிட முடிந்தது. இலங்கையின் வரலாறுகள் படையெடுப்புகளின் அடையாள சின்னங்களை பார்வையிட முடிந்தது. கலை வர்ணம் கூடிய சிற்பக்கலைகள் பாரம்பரிய மன்னர்களின்சிலைகள் பாவிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றையும் பார்வையட முடிந்தது.
யுத்தகாலத்தின் பின்னர் மோதலை எவ்வாறு தீர்ப்பது. பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அரங்க விளையாட்டின் மூலம் அறிய முடிந்தது. பிரச்சனையை கண்டு ஓடி ஒழிய கூடாது. நின்று சிந்தித்து செயலாற்ற வேண்டும்தனியாக நாம் மட்டும் போராடி பிரச்சினையில் இருந்து விடுதலை பெற முடியாது எல்லோருடைய பங்களிப்பும் அவசியம் என்பதனை அறிய முடிந்தது.
சிங்கள் முஸ்லீம் மாணவர்களுடன் சகஜமாக கலந்துரையாடவுமம் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது யுத்தம் முடிவடைந்து இரண்டு வருட ங்களின் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் சிங்கள் முஸ்லீம் தழிழ் மாணவர்களின் கருத்தக்களையும் கேட்டிறிய கூடியதாக அமைந்தது.
களனி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கண்காச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மனித உடல்களின் செயற்பாடுகள் உடல் உறுப்புக்களில் ஏற்படும் நோய்கள்அறிகுறிகள் விளைவுகள் குறித்தும் அறிந்து கொள்ள கூடியதாக அமைந்தது. விபத்துக்கள் தொடர்பான விளக்கங்கள் வரைபடங்கள் ஊடாக அறிய முடிந்துத. விபத்து ஏற்படின உடனடியாக செய்யவேண்டியது கொலை தொடர்பாகவும் அறிய முடிந்தது.இந்த கண்காட்சி சகிப்பு தன்மையையும் பயஉணர்வினையும் அகற்றுவதாய் அமைந்நது.
ஊடகவியலாளர்களுக்கு வாசிப்பு திறன் குறைவடைந்து வருகின்றது வாசிப்பு அவசியம் எனதினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் கூறினார். மகாராஜா கூட்டுத்தாபனத்தின் நிறுவனங்களின் செயற்பாடுகளை பார்வையிட்டோம் செயதி அறைகளின் செயற்பாடுகள் எவ்வாறு அவை இயங்குகின்றன என்பதனையும் அறிந்து கொள்ள முடிந்நது. நிகழ்சி நிரல்கள் தயாரிப்புகள் அதனை எவ்வாறு பதிவு செய்கின்றனர் ன்பதனை ரத்மலானை சென்று பார்வையிட்டோம் ஒளி ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பது தொடர்பாகவும் கேட்டு அறிச்து கொள்ள முடிந்தது.
வீரகேசரி என்ற பத்திரிக்கையின் நிறுவன செயற்பாடுகளை பார்வையிட முடிந்தது. இந்த நிறுவணத்தின் வளர்ச்சிப்பாதைகள் கடந்து வந்த சவால்கள் தொடர்பாகவும் அறிந்து கொண்டோம். இனையத்தில் இயங்கி வரும் வீரகேசரி ஒன்லைன் செயற்பாடுகள் எந்தெந்த முறையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன எனவும் அறிய முடிந்தது.
குழுவாக சேர்ந்து செயற்படுவது குறித்தும் இந்த சுற்றுப்பயனம் கற்றுத்த்நதது. விட்டுக்கொடுத்து எம்முள் இருந்த சிறு சிறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள இவ் சுற்றுப்பயணம் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
1 comments:
Lovely work! I'm definitely going to visit the blog frequently.
Holy crap that is a big bump !
Honda Fit AC Compressor
Post a Comment