யாழ்ப்பானத்தின் மரவை வெளிப்படுத்தும் முகமாக யாழ் புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பான பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24.02.2012) காலை 11.00 மணிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார் .மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்ஷ பிரதம விருந்தினராகவும் கொழும்பு மாநகரசபை எதிர்கட்சி தலைவர் மிலிந்த மொறகொட இராணுவ தளபதி ஜெனரல்.ஜே.ஜெயசூரியயாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க யாழ்.சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
படையினரால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பல்வேறு விதமான் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன..
03 தினங்கள் நடைபெறவுள்ள இந்தப் புகைப்படக் கண்காட்சியில் யாழ்.மண்ணில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் விகாரைகள் பள்ளிவாசல்கள் பனைவள உற்பத்திகள் கடல்வள உற்பத்திகள் பிரபலமான இடங்கள் தீவக மண்ணில் பிரசித்தி பெற்ற இடங்கள் புராதன காலத்திலிருந்து இன்று வரையுள்ள போக்குவரத்து சாதனங்கள் உட்பட யாழ் மாவட்டத்தின் பாரம்பரியம் கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒளிப்படங்கள் என ஏராளமானவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளையும் அவர்களின் வெளிப்பாடுகளையும் இந்த புகைப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன
இந்தக் கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலை ஆர்வலர்கள் என ஏராளமனோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
0 comments:
Post a Comment