பினங்கூட எழுந்து வந்து சாட்சி சொல்லும் என்பார்கள். சாட்சிகளே இல்லாமல் தட்;டி கேட்க யாரும் இல்லை என்று துணிவுடன் அரங்கேறும் நிகழ்வுகளை வெளிக்கொணர யாரும் இல்லா விட்டாலும் சாவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு காட்டவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு இன்றைய அபிவிருத்தி உலகமும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. சர்வாதிகார ஆட்சியின் கீழ் தம் மக்களை தாமே அழித்து ரத்தத்தில் குளித்து சந்தோஷம் அடைகின்ற ஆட்சியாளர்களும், அவர்கள் படைகளும் செய்கின்ற கொரூரமான நிகழ்வுகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உலகிற்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. கும்பல் கும்பலாக கொன்று குவிக்கப்பட்டிருக்கும் அப்பாவி உயிர்களுக்கு நடந்த அநீதியை உலக நாடுகள் பாருங்கள் என்று சிரிய மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கி;ன்றனர்.
சிரியாவில் அரசியல் வன்முறைகளில் காத்திரமான செல்வாக்கை செலுத்தி வரும் சமூக ஊடகங்கள் அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெடுப்பதில் பெரும் பங்களிப்பு செய்கின்றன. சிரியாவில் வெடிக்கும் ஏவுனைகளின் சத்தத்தையும், ஓடுகின்ற ரத்த ஆற்றினையும் உலக மக்கள் உணர கூடியதாக இருக்கின்றது என்றால் அது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் துணிகரம் மி;க்க உவைணைநn தழரயெசடளைவள களின் செயற்பாடுகளுமே.
சாட்சியம் அற்ற யுத்தத்தை நடத்தலாம் என்று நினைக்கும் பசார் அல் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் இந்த நிழல் யுத்தத்தில் உயிர் அற்றவர்கள் சாட்சியாய் நிற்கின்றமை உலக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
;ஆட்சியாளர்கள் செய்த அட்டூளியங்கள் சாட்சிகள் இன்றியும் சாட்சிகள் அழிக்கப்பட்டும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டும் கொடுங்கோல் ஆட்சிகள் அரங்கேறின. ஆபத்தான் யுத்த களத்திற்கு ஊடகவியலாளர்களும் மனிதாபிமான குழுக்களும் செல்ல முடியாத சாத்தியம் அற்ற இடத்தில்; ரத்தக்கறை படிந்த கொடுங்கோலின் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட சமூக வலைத்தளங்கள் செயற்படுகின்றன. ளுNN ஜளாயஅ நெறள நெவறழசமஸ வெளியிட்டுள்ள மனிதப்படுகொலையின் புகைப்படங்களில் மனித உடல்கள் மட்டுமன்றி ஷெல் வீச்சுக்களும் பதிவாகியுள்ளன.
வன்னி இறுதியுத்தத்தி;ல் படையினரால் செய்யப்பட்ட மனிதப்படுகொலைகளும் சித்திரவதைகளும் சாட்சிகள் இன்றியும் சாட்சிகள் மறைக்கப்பட்டு; இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் ஒரு சில எச்சங்களாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட கானொளிகள் அநீதிகளையும் படையினரின் வெறித்தனத்தையும் உலகிற்கு எடுத்து காட்டியது. சாட்சிகளால் மனித உயிர்கள் இன்று நிற்க முடியாத நிலையில் உயிர் அற்ற உடல்களே உயிருடன் இருக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.
மரணமும் மரணத்தால் அலைக்கழிக்கப்பட்ட நாட்களும் மிக்க கொடுமையானது. நம் மீது குண்டு விழாதா என்று மனித படுகொலைகளை கண் முன் பார்த்த ஆன்மாக்கள் ஏங்கித் தவிக்கின்றன. கண்முன்னே சிதறிப்போகும் உயிரற்ற உடல்கள், உயிர் போகாதா என்று ஏங்கியபடி இருக்கும் நடைபினங்கள் என்று விரக்தியின் விளிம்பில் வாழும் மக்களை ஆற்றுவதற்கு விரும்பும் சர்வதேசம். அடிமேல் விழும் அடியை தடுப்பதற்கோ அணை போடவோ யாரும் இல்லை. ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் பாருங்கள் என்று கொடுங்கோல் ஆட்சியாளர்களும் நாங்கள் பார்க்கின்றோம் நீங்கள் அரங்கேற்றுங்கள் என்று சர்வதேசமும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது. அழுது அழுது வற்றிப்போன கண்ணீருடன் இழப்பதற்கு எதுவும் இல்லை சாட்சியங்களை மட்டும் காண்பிக்கின்றோம் என்று விரக்தியின் விழிம்பில் இருந்து மக்களும் தினம் தினம் போராடி வருகின்றனர்.
எவை நடந்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நம்மவர் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான். துக்கத்தின் நினைவுகள் மிகக் கொடியவை மீள மீள வரும் அழியாத நினைவுகள். மீண்டும் இப்படி ஒரு யுத்தத்தையும் மனித படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுக்காப்பின்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று வாழும் நம்மவர் மக்கள் சிரிய மக்களுக்காய் வருத்தத்தை மட்டும் தான் சொல்ல முடியும். காயம் மாறுகின்ற போதும் வடுக்கள் மாறுவதில்லை இந்த சிரிய மக்களின் அவலமும் மனிதப்படுகொலைகளும் எம்மவர் நினைவுகளை மீண்டும் நினைவு படுத்துகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலையின் சாட்சியாய் எஞ்சி இருப்பது சனல் 4 வெளியி;ட்ட கானொளி மட்டுமே. அப்படி ஒரு சாட்சியாய் சிரிய மனிதப் படுகொலை அடங்கிய கானொளிகளும் புகைப்படங்களும் முக்கிய ஆதாரமாக பசார் அல் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சி சொல்லும்
0 comments:
Post a Comment